Bangladesh captain Mashrafe Mortaza (R) shakes hands with India's captain MS Dhoni after India's 109-run Cricket World Cup quarter final win over Bangladesh in Melbourne, March 19, 2015. REUTERS/Hamish Blair - RTR4U0DF

ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்த சீனியர் வீரர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது அதில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு சில சீனியர் வீரர்கள் இடம்பிடித்ததால் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி தீர்த்துள்ளனர்.

வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒரு போட்டி கைவிடப்பட மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்த சீனியர் வீரர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 1இந்நிலையில் வங்காளதேசம் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரேயொரு  போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

சொந்த மண்ணில் வங்காளதேசம் அணி எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை ஜிம்பாப்வே அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக வங்காளதேசம் அணி மோசமான விளையாடி வரும் நிலையில், இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘நான் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் பார்த்து வருவது என்ன வென்றால், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் அது சிறந்ததாக இருக்கும் என்பதைத்தான். ஆனால் அது நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

ஒருநாள் தொடருக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்த சீனியர் வீரர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! 2

எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நான் அவர்களிடம் ஜிம்பாப்வே அணியை எளிதாக நினைத்தால் அது பேரழிவாக இருக்கும் என்று சொல்கியிருக்கிறேன். ஜிம்பாப்வே எங்கே இருக்கிறதோ அங்கே இருக்கிறது. ஆனால் நாம் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கவில்லை. நம்மைவிட அவர்கள் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். நாம் ஆப்கானிஸ்தானிடம் தோற்போம் என்றால், ஜிம்பாப்வே அணியிடமும் தோற்க முடியும்.

நமக்கு புதிய மனநிலைத் தேவை. நம்முடைய அணியின் சீனியர் வீரர்கள் அதிக அளவில் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் நாம் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது ஒருவர் கூட நாம் மோசமாக விளையாடினோம் என்று கூறவில்லை. ஆனால், பாகிஸ்தான் டி20 தொடரில் வீரர்களின் அணுகுமுறை மற்றும் மனநிலை சற்றும் சரியில்லை.” என்றார்.

ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி:

மஷ்ரஃப் பின் மோர்டாசா (கேப்டன்), தமீம் இக்பால், நஜ்முல் ஹொசைன் சாந்தோ, மஹ்முதுல்லா, முஷ்ஃபிகூர் ரஹீம், முகமது மிதுன், லிட்டன் குமார் தாஸ், தைஜுல் இஸ்லாம், அஃபிஃப் ஹொசைன், நைம் ஷேக், அல் அமீன் ஹொசைன், முகமது ஷைபுதின், மெய்தி ஹாசன், சபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *