இந்த இந்திய வீரர் கண்டிப்பாக வந்து ஆட வேண்டும்: வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைப்பு 1

வங்காளதேசம் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜுபுர் ரஹ்மானின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் வங்காளதேசம் ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையில் டாக்கா மைதானத்தில் இரண்டு டி20 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும் மார்ச் 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதிக்குள் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இந்த இந்திய வீரர் கண்டிப்பாக வந்து ஆட வேண்டும்: வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைப்பு 2
India’s Virat Kohli during the ICC Cricket World Cup group stage match at Headingley, Leeds. (Photo by Nigel French/PA Images via Getty Images)

இந்நிலையில் ஆசிய லெவன் அணியில் விராட் கோலி இடம் பிடிக்க வேண்டும். இதுகுறித்து வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என பிசிசிஐ பதில் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து நான்கு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘‘நாங்கள் அந்த நான்கு வீரர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நான்கில் இருந்து ஐந்து வீரர்களை அனுப்புவோம்’’ என்றார்.

இந்த இந்திய வீரர் கண்டிப்பாக வந்து ஆட வேண்டும்: வங்கதேச கிரிக்கெட் வாரியம் அழைப்பு 3
MANCHESTER, ENGLAND – JULY 09: Yuzvendra Chahal(R) and Virat Kohli of India(L) celebrate the wicket of Kane Williamson of New Zealand during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand at Old Trafford on July 09, 2019 in Manchester, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

இந்தியா நியூசிலாந்து தொடரை மார்ச் 4-ந்தேதியுடன் முடித்துக் கொண்டு இந்தியா வருகிறது. அதன்பின் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா தொடர் 18-ந்தேதிதான் முடிவடைகிறது.

18-ந்தேதி டாக்காவில் போட்டி தொடங்கினால் விராட் கோலியால் பங்கேற்க முடியாது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *