நடராஜனுக்கு இடம் இல்லை; அடுத்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 1

இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் 5ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ள நிலையில், இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

நீண்ட நாட்களாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காத ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு இங்கிலாந்து அணியுடனான தொடரில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடராஜனுக்கு இடம் இல்லை; அடுத்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 2

காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் மிகசிறப்பாக விளையாடிய வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. காயம் காரணமாக ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர வழக்கமான அனைத்து வீரர்களும் இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நடராஜனுக்கு இடம் இல்லை; அடுத்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !! 3

இங்கிலாந்து அணியுடனான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், அஜின்கியா ரஹானே, விர்திமான் சஹா, கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டிய, ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *