300 கோடி இருக்குறவன் மட்டும் இந்த பக்கம் வா; அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.பி.எல் !! 1

300 கோடி இருக்குறவன் மட்டும் இந்த பக்கம் வா; அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.பி.எல்

இந்த வருட ஐ.பி.எல் தொடர் ஸ்பான்சர்சிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடரானது, செப்டம்பர் மாதம் அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டும் என பி.சி.சி.ஐ., கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

300 கோடி இருக்குறவன் மட்டும் இந்த பக்கம் வா; அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.பி.எல் !! 2

ஏற்கனவே பல எதிர்புகள், பல சிக்கல்களை தாண்டி பி.சி.சி.ஐ., இத்தகையை முடிவை எடுத்த பிறகு, புதிய பிரச்சனையாக இந்த வருடத்திற்கான ஸ்பான்சர்சிப்பில் இருந்து விலகி கொள்வதாக விவோ நிறுவனம் திடீரென அறிவித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்த வருடத்திற்கான ஸ்பான்சர்சிப்பை பெற அமேசான், பதஞ்சலி, பைஜூஸ் போன்ற நிறுவனங்கள் கடுமையாக போட்டி போட்டு வருவதாக கூறப்படும் நிலையில், புதிதாக ஸ்பான்சர் செய்ய முன்வரும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 300 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பங்கேற்கலாம் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

‘புதிய டைட்டில் ஸ்பான்சருக்கான உரிமம் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31,2020 வரை மட்டுமே செல்லுபடியாகும்’ என தெரிவித்துள்ளார் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா.

300 கோடி இருக்குறவன் மட்டும் இந்த பக்கம் வா; அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஐ.பி.எல் !! 3

ஸ்பான்சர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளார் ஜெய் ஷா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *