PERTH, AUSTRALIA - DECEMBER 18: Tim Paine of Australia shakes hands with Virat Kohli of India after Australia claimed victory during day five of the second match in the Test series between Australia and India at Perth Stadium on December 18, 2018 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

ஆஸ்திரேலிய கேப்டனை குறை கூறும் விதமாக வசைபாடியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் விராட் கோலி மீது செய்திகளை தெரிவித்திருந்தது. அது முற்றிலும் தவறான செய்தி என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் அருகில் சென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ,

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் நான்..
நீ வெறும் தற்காலிக கேப்டன் மட்டும்தான்!!

என அவரை வசை பாடியதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி அதன் பின்னர் வைரலாக் மாறியது. ஆனால் அவை முற்றிலும் தவறானது மற்றும் வேண்டுமென்றே கிளப்பிவிடுகிறார்கள் என பிசிசிஐ தற்போது கூறியுள்ளது.

அப்படி ஏதும் அவர் சொல்லவில்லை... அது முற்றிலும் குப்பை செய்தி: கோலி பற்றி பிசிசிஐ மறுப்பு!! 1

பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.

நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடியபோது ஆஸ்திரேலிய பவுலர்கள் எங்களுக்கு இடைவிடாது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் அதில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டனர்.

ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது நாங்கள் ஜடேஜாவை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். சுழற்பந்து வீரர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. 4 வேகப்பந்து வீரர்கள் போதுமானது என்று கருதுதினோம்.அப்படி ஏதும் அவர் சொல்லவில்லை... அது முற்றிலும் குப்பை செய்தி: கோலி பற்றி பிசிசிஐ மறுப்பு!! 2

4 வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது பிட்சைப் பார்த்து முடிவு செய்யப்பட்ட விஷயம்.  நேதன் லயனுக்கு பிட்சில் உள்ள ரஃப் பெரிதாக உதவவில்லை. லயன் பந்துகளை வீசிய வேகத்தின் அளவு அவருக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தது.

இந்தப் பிட்சில் ஸ்பின் அவசியம் என்று ஓர் அணியாக நாங்கள் கருதவில்லை.  பிட்சைப் பார்த்தோம் முதல் 3 நாட்களுக்கு அது வேகப்பந்துக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று கணித்தோம் அப்படித்தான் ஆனது.  கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் அணிக்கு ஆக்கபூர்வமாக அமையும் என்று எண்ணினோம்.

புவனேஷ்வர் குமார் சமீபத்தில் நிறைய 4 நாள் போட்டிகளில் ஆடவில்லை. உமேஷ் யாதவ் மே.இ.தீவுகளுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் உமேஷ் நல்ல பவுலிங் ரிதமில் இருந்தார். அதனால்தான் புவிக்கு பதில் உமேஷைத் தேர்வு செய்தோம்.

இரண்டே இரண்டு சூழ்நிலைகளைத்தான் நாம் சிந்திக்க முடியும். இன்னொரு கூடுதல் வேகப்பந்து பவுலர் எனும்போது அஸ்வின், ஜடேஜா பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார்கள் என்று தோன்றும். அஸ்வின், ஜடேஜா பேட்டிங் பங்களிப்பு பற்றி நம் அனைவருக்குமே தெரியும்.  ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் அது தந்திரோபாயமானதுதான். வேகப்பந்து வீச்சா அல்லது ஸ்பின்னுடன் அவரது பேட்டிங்கையும் நம்பி எடுப்பதா என்பது ஒருமாதிரியான இரண்டகச் சூழ்நிலைதான்.

அப்படி ஏதும் அவர் சொல்லவில்லை... அது முற்றிலும் குப்பை செய்தி: கோலி பற்றி பிசிசிஐ மறுப்பு!! 3

நாங்கள் விரும்பிய முடிவை பெறாததால் ஆட்டத்திறன் குறித்து சொல்வது பொருத்தமற்றது. அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துவதுதான் இனி நோக்கமாக இருக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட முடிவு (சர்ச்சைக்குரிய கேட்ச்) குறித்து ஆடுகளத்தில் எடுக்கப்பட்டது. அது அங்கேயே முடிந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கூறும்போது, “இந்த வெற்றியால் நிம்மதி அடைகிறோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.



  • SHARE

    விவரம் காண

    அடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி!

    விண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    விண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..!

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...

    ஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா? – பாண்டியா ஓபன் டாக்

    காயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா?  என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...

    பல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி!

    இந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...

    மும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...