இனி இரண்டு மாதங்கள் இல்லை... மூன்று மாதங்கள் ஐபிஎல் தொடர் நடைபெறும்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ !! 1

இனிமேல் வரும் ஐபிஎல் தொடர் 94 போட்டிகளைக் கொண்ட தொடராக அமையும் என்று பிசிசிஐயின் தலைமை செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடர், உலகின் அதிக பணம் புழங்கும் போட்டிகளில் ஒன்றாக வலம் வருகிறது.

இனி இரண்டு மாதங்கள் இல்லை... மூன்று மாதங்கள் ஐபிஎல் தொடர் நடைபெறும்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ !! 2

ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றதால் ஐபிஎல் தொடருக்கான வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது, பிரண்டிங், விளம்பரம் என அனைத்தையும் போட்டியின் நடுவில் மக்கள் மனதில் கொண்டு சேர்ப்பதற்கு முக்கியமான ஒரு வழியாக ஐபிஎல் தொடர் இருப்பதால், எப்படியாவது இந்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை பெற வேண்டுமென்று உலகில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ தலைமைச் செயலாளர் ஜெய்ஷா எதிர்வரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடருக்கான போட்டிகளில் 94 உயர்த்துவதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது,“முதலில் நாம் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 60 போட்டிகள் கொண்ட தொடரராக இருந்தது, இனிமேல் வரும் சுழர்ச்சி காலங்களில் (2023-2027) மொத்த தொடரிலும் 410 போட்டிகளை உள்ளடக்கிய தொடராக இருக்கும், முதல் இரண்டு சீசன்களில் 74, போட்டிகளும் அடுத்த சீசனில் 84, போட்டியும் அதற்குப்பின் இருக்கும் இரண்டு சீசன்களில் 94 போட்டியாகவும் நடைபெறும் என்று ஜெய்ஷா தெரிவித்திருந்தார்,மேலும் இதற்கான முன்னேற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், இது சம்பந்தமாக ஐசிசியிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் எதிர்காலங்களில் ஐபிஎல் தொடர் இரண்டரை மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இனி இரண்டு மாதங்கள் இல்லை... மூன்று மாதங்கள் ஐபிஎல் தொடர் நடைபெறும்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிசிசிஐ !! 3

 

இந்த அறிவிப்பு வந்த உடனேயே ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை பெறுவதற்கான போட்டியும் கடுமையாக நடைபெற்றது.

ஜூன் 12,13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் 2023-2027 வரை டிவியில் ஒளிபரப்பு உரிமத்தை ஒரு போட்டிக்கு 57.5கோடி என 23,575 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது, அதேபோன்று Digital rights வலைதளங்களில் ஒளிபரப்பும் உரிமத்தையும் மற்றும் selected 18 games உரிமத்தையும் வியோகாம்18 23.758 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதனால் அடுத்த 5 வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு ஒப்பந்தம் 48,390 கோடிக்கு மிகப் பெரும் சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் உலகின் அதிக பணம் புழங்கும் ஐபிஎல் தொடர் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published.