இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வந்த 2 ஆயிரம் விண்ணப்பங்களில் இருந்து 6 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சி யாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30ஆம் தேதியுடன் முடிந்தது.இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்த 6 பேரிடம் மட்டும்தான் நேர்காணல்! கபில்தேவ் அறிவிப்பு!! ரவி சாஸ்திரி இருக்கிறாரா? 1

மேலும் தற்போது, தலைமை பயிற்சியாளராக தற்போது ரவிசாஸ்திரி செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பையுடன் அவரது பதவிக் காலம் முடிந்த நிலையில், மே.இ.தீவுகள் தொடருக்காக அவருக்கும், உதவி பயிற்சியாளர்களுக்கும் 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளர் நியமனத்துக்கானஅறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. ரவிசாஸ்திரி நேரடியாக நேர்காணலில் பங்கேற்க சலுகை தரப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் தேர்வு வரும் 16 ஆம் தேதி நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Cricket, India, BCCI, Mahela Jayawardene, Virender Sehwag, Anil Kumble
“These six will give presentation for head coach before CAC. It has been learnt that these six have been short-listed for interview with the CAC,” a senior BCCI official, privy to the development, told PTI.

‘பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார் கபில்தேவ்.

இந்நிலையில், இந்த பதவிக்கு 2000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து ,

 • ஆஸ்திரேலியாவின் டாம் மூடி,
 • நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன்,
 • தென்னாப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன்,
 • இலங்கையின் ஜெயவர்த்தனே,
 • இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங்,
 • லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  இவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். கபில்தேவ் தலைமையிலான சிஏசி முன்பு 6 பேரும் தங்கள் செயல்பாடு, திட்டங்கள் குறித்து விவரிப்பர். பின்னர் புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார். • SHARE

  விவரம் காண

  சச்சினை ‘சூச்சின்’ என கண்டபைக்கு உளறிய டிரம்ப்: பதிலடி கொடுத்த ஐசிசி

  அமெரிக்க அதிபர் தனது பேச்சின் போது "சூ சின்" முதல் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இந்திய நாட்டில் இருப்பதாக...

  தோனி 2023 உலககோப்பையிலும் ஆடுவார்: முன்னாள் வீரர் திடுக் தகவல்

  கிரெக் சாப்பல் பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது, அதில் ஒருவர்தான் இந்த ஆந்திரா வீரர் வேணுகோபால் ராவ். ஆந்திராவில் உள்ள...

  இந்திய இளம் வீரர்கள் நன்றாக ஆட இதுதான் காரணம்: அப்ரிடி ஓப்பன் டாக்

  சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை இளம் இந்திய வீரர்கள் சமாளித்து மீண்டு வர அவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் துணைபுரிகிறது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர்...

  பவுண்டரிக்கு அடிக்க வேண்டிய பந்தை கட்டை வைக்க கூடாது: புஜாராவிற்கு மறைமுக அட்வைஸ் கொடுத்த கோலி

  வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து விமர்சனங்களை கோலி எதிர்கொண்டு வருகிறார். நியூஸிலாந்து நெருக்கமான களவியூகம் அமைத்து நீண்ட நேரம் ஒரே...

  வீடியோ: பந்தை சேதப்படுத்திய பாக். வீரர்! மைதானத்திலேயே தட்டிக்கேட்டஜேசன் ராய்!

  பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 என்றாலே எப்போதும் சர்ச்சைகள்தான் ஒன்று சூதாட்ட சர்ச்சை கிளம்பும் அல்லது வீரர்கள் பந்தைச் சேதம் செய்த சர்ச்சைக்...