உள்ளூர் டி.20 தொடரான சையத் முஸ்தாக் அலி டிராபியின் சில விதிமுறைகளை பி.சி.சி.ஐ., மாற்றியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.

இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இந்த ஆண்டுக்கான இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த தொடரில் பின்பற்ற சில போட்டி விதிமுறைகளை பி.சி.சி.ஐ., இந்த தொடருக்காக மாற்றியமைத்துள்ளது.

அதன் படி, கடந்த தொடரில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் சிறப்பாக விளையாடி வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை மண்டலம் வாரியாக, ஒரு மண்டலத்திற்கு ஐந்து அணி என்ற கணக்கில் இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தினர். இதில் கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த விதிமுறையை மாற்றியுள்ள பி.சி.சி.ஐ., கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என பிரிக்கப்பட்டுள்ள  ஐந்து பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியின் அடிப்படையில் முதல் இரு அணிகள் என மொத்தம் 10 அணிகள்  knockout சுற்றுக்கு தகுதி பெறும் என்று அறிவித்துள்ளது. Knockout சுற்று வரும் 21ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

மேலும் ஏபரல் மாத இறுதியில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ளதையும் கருத்தில் கொண்டுள்ள பி.சி.சி.ஐ., இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை ஐ.பி.எல் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் குழுவிற்கு அடையாளப்படுத்துவதற்காகவே இது உறுதுனையாக இருக்கும் என்றும் பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.

விவரம் காண

மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

எப்பொழுது : மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்,  ஏப்ரல் 24, 2018, இரவு 8 மணியளவில். எங்கே : வான்கடே ஸ்டேடியம், மும்பை வானிலை...

மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! சன் ரைசஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள்...

மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள்...

ஜுலன் கோஸ்வாமியின் தபால் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது தபால் துறை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளார். ஜுலன் கோஸ்வாமி...

இந்த வருடம் இந்தியாவிற்குக் கூட வரக் கூடாது, இந்தியா வந்து சன் ரைசர்ஸ் அணியின் போட்டியை பார்க்கவும் தடை : பாவப்பட்ட வார்னர்

ஜாலியாக இருக்கிறார், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சார்...