இந்த ஒரு அரைசதத்தின் மூலம் பலருக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டீர்கள் ! பாராட்டிய விவிஎஸ் லட்சுமணன் ! 1

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. 

இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45 ரன்கள் விளாசியுள்ளனர். 

1947 ஆண்டிற்கு பிறகு இந்த சாதனைய படைத்த 2வது வீரர் என்ற பெருமை பெற்ற வாஷிங்டன் சுந்தர்  ! 3
Washington sundar

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் குவித்துள்ளனர். இதில் ரோதித் 44, மயங்க் அகர்வால் 38, ரஹானே 37, சுந்தர் 62 மற்றும் ஷர்துல் தாகூர் 67 ரன்கள் விளாசி இருக்கின்றனர். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். 

இந்த ஒரு அரைசதத்தின் மூலம் பலருக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டீர்கள் ! பாராட்டிய விவிஎஸ் லட்சுமணன் ! 2

இந்திய அணியில் 6 விக்கெட் இழப்பிற்கு பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் நிதானமாக விளையாடி பாட்னர்சிப்பில் 123 ரன்கள் குவித்தனர். 7வது விக்கெட்டில் இவர்களது கூட்டணி ரன் குவிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த இவர்களது ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார். ஷர்துல் தாகூர் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்து 67 ரன்களுடன் போல்டில் விக்கெட் இழந்தார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து விளையாட யாரும் இல்லததால் இவரும்  62 ரன்களுடன் வெளியேறினார். 

1947 ஆண்டிற்கு பிறகு இந்த சாதனைய படைத்த 2வது வீரர் என்ற பெருமை பெற்ற வாஷிங்டன் சுந்தர்  ! 4

சுந்தர் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அறிமுக டெஸ்ட் அரைசத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் இவர்களை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.  லட்சுமணன் தனது ட்விட்டரில் ” தாகூர் மற்றும் சுந்தரின் அறிமுக டெஸ்ட் அரைசத்திற்காக எனது பாராட்டுக்கள். நான் உங்களது டெக்னிக், திறமை மற்றும் தைரியம் என அனைத்தையும் விரும்புகிறேன். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக மாறிவிட்டீர்கள்” என்று ட்விட் செய்துள்ளார் லட்சுமணன். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *