லபுசாக்னே சதமடிக்க இவங்க மூன்னு பேர் தான் காரணம்; வருத்தெடுக்கும் ரசிகர்கள் ! 1

லபுசாக்னே சதமடிக்க இவங்க மூன்னு பேர் தான் காரணம்; வருத்தெடுக்கும் ரசிகர்கள் ! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்டில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியில் இருந்து பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் காயமடைந்ததால் தற்போது நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால் நான்காவது டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது.

லபுசாக்னே சதமடிக்க இவங்க மூன்னு பேர் தான் காரணம்; வருத்தெடுக்கும் ரசிகர்கள் ! 2
Poi

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45  ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சில் 2 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் குவித்துள்ளனர். இதில் ரோகித் சர்மா 44 மற்றும் சுப்மன் கில் 7 ரன்கள் குவித்துள்ளார்கள்.

லபுசாக்னே சதமடிக்க இவங்க மூன்னு பேர் தான் காரணம்; வருத்தெடுக்கும் ரசிகர்கள் ! 3

தற்போது புஜாரா (8) மற்றும் ரஹானே (2) விளையாடி வருகின்றனர். ஆனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளிக்கு பின்பு கனமழை காரணமாக போட்டி இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் லபுசாக்னே 204 பந்துகளை எதிர்கொண்டு 108 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒன்பது பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். இவரது இந்த ரன் குவிப்பால் ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய இலக்கை எட்டியது.

லபுசாக்னே சதமடிக்க இவங்க மூன்னு பேர் தான் காரணம்; வருத்தெடுக்கும் ரசிகர்கள் ! 4
BRISBANE, AUSTRALIA – JANUARY 15: Marnus Labuschagne of Australia bats during day one of the 4th Test Match in the series between Australia and India at The Gabba on January 15, 2021 in Brisbane, Australia. (Photo by Albert Perez – CA/Cricket Australia via Getty Images)

ஆனால் இவர் தனது சதத்தை விளாசும் முன் இரண்டு கேட்ச்களை கொடுத்து தப்பியிருக்கிறார். இவர் 36 ரன்கள் குவித்த போது ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் இந்த கேட்சை ரஹானே பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து நடராஜன் வீசிய ஓவரின் பண்ட் மற்றும் புஜாரா இருவரும் இணைந்து இவரது கேட்ச் ஒன்றை தவறவிட்டுள்ளனர். தற்போது லபுசாக்னே சதம் விளாச ரஹானே, பண்ட், புஜாரா விட்ட கேட்ச்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *