சமீபத்தில் நடந்த பென் ஸ்டொக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ‘சண்டை” சர்ச்சை காரணமாக தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு தீவிரமான முடிவினை எடுத்துள்ளது.
ஆம், அடுத்த அறிவிப்போ அல்லது முடிவோ எடுக்கப்படும் வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்சின் பெயர்கள் இடம் பெராது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அற்வித்துள்ளது.
மேலும், இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது.
JUST IN: Stokes and Hales won't be considered for England selection until further notice.
— Cricbuzz (@cricbuzz) September 28, 2017
இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த திங்கட்கிழமை பிரிஸ்டோனில் ஒரு நபரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
சந்தேகத்தின் பேரில் பென் ஸ்டோக்ஸை போலீசார் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். அதன்பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவரை வெளியே விட்டுள்ளனர். அவருடன் மற்றொரு வீரர் ஹேல்ஸும் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேக்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரின் காவல் நிலைய சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டோல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலானது அணி வெற்றி பெற்றது. மேலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 73 ரன்கள் குவித்தார்.
போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் இருவரும் சிலருடன் சண்டை இட்தாகத் தெரிகிறது.
மேலும், அந்த சண்டையின் போது பென் ஸ்டோக்ஸ் ஒருவரை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டோல் நக காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்னும் அவரிடம் பிரிஸ்டோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்க்கு முன்பு 2012 ஆண்டும் இதே போல் அவருடைய ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 2013 ஆண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக ஆடிய போது கடை இரவில் குடித்து விட்டு ஊர் சுற்றியதற்க்காக அவரது நாடான நியூசிலாந்திற்க்கு திருப்பி அனுப்ப பட்டார்.
பின்பு அடுத்த வருடமும் சும்மா இருக்கவில்லை இவரது கை. 2014 ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது அவரது லாக்கரின் அறையில் இருந்த பூட்டை அவரது கையால் ஓங்கி குத்தி அவரது கையை முறித்துக் கோண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது,
தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கயுள்ளார். இவரிடமிருந்தே மேற்கத்திய கலாச்சாரன் எவ்வளவு கொடூரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.