CHRISTCHURCH, NEW ZEALAND - FEBRUARY 29: Virat Kohli of India looks dejected after being dismissed for 3 runs by Tim Southee of New Zealand during day one of the Second Test match between New Zealand and India at Hagley Oval on February 29, 2020 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

கிரிக்கெட்டின் பைபிள் என்று கருதப்படும் விஸ்டனின் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார், இதன் மூலம் இந்திய கேப்டன் விராட் கோலியின் 3 ஆண்டு கால மகுடத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

2020 விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் பென் ஸ்டோக்ஸை உலகின் சிறந்த வீரர் என்று அறிவித்துள்ளது. 2005-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் இந்த விருதை அலங்கரித்த பிறகு இன்னொரு இங்கிலாந்து வீரராக பென் ஸ்டோக்ஸ் தற்போது இந்த விருதை அலங்கரித்துள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிராக உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தார் பென் ஸ்டோக்ஸ். அதே போல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது இன்னிங்சில் பிரையன் லாராவை நினைவூட்டும் விதமாக 135 நாட் அவுட் என்று மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தார்.சதமடிக்காமல் சொதப்பிய கோலி! கோலியின் 3 ஆண்டுகால மகுடத்தை தட்டி தூக்கிய பென் ஸ்டோக்ஸ்! 1

விஸ்டன் எடிட்டர் லாரன்ஸ் பூத் கூறும்போது, “வாழ்நாள் சாதனை இன்னிங்ஸை சில வாரங்கள் இடைவெளியில் இருமுறை நிகழ்த்தி விட்டார் பென் ஸ்டோக்ஸ், முதலில் உலகக்கோப்பையில் மிகப்பெரிய திறமையுடனும் கொஞ்சம் அதிர்ஷ்டத்துடனும் இலக்கை விரட்டி வெற்றி பெறச் செய்தார், சூப்பர் ஓவரில் 15 ரன்களை எடுக்க உதவினார்.

பிறகு ஆஷஸ் தொடரில் ஹெடிங்லீயில் 3வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார், 135 நாட் அவுட், என்று ஒரு விக்கெட் வெற்றி பெறச் செய்தார், வெள்ளைப் பந்தாக இருந்தாலும் சிகப்புப் பந்தாக இருந்தாலும் இயற்கையின் ஒரு சக்தி பென் ஸ்டோக்ஸ்” என்று கூறி புகழாரம் சூட்டினார்.

சதமடிக்காமல் சொதப்பிய கோலி! கோலியின் 3 ஆண்டுகால மகுடத்தை தட்டி தூக்கிய பென் ஸ்டோக்ஸ்! 2
LEEDS, ENGLAND – AUGUST 22: Marnus Labuschagne of Australia is trapped LBW by Ben Stokes of England during day one of the 3rd Specsavers Ashes Test match between England and Australia at Headingley on August 22, 2019 in Leeds, England. (Photo by Gareth Copley/Getty Images)

முன்னதாக ஸ்டோக்ஸ் ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் விருதையும் தட்டிச் சென்றார். உலகக்கோப்பை சூப்பர் ஓவரை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் விஸ்டனின் 5 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ஆஸி.யின் பாட் கமின்ஸ், மார்னஸ் லபுஷேன், எல்லிஸ் பெரி ஆகியோர் ஆர்ச்சருடன் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எசெக்ஸ் அணி ஆஃப் ஸ்பின்னர் சைமன் ஹார்மரும் பட்டியலில் உள்ளார்.

எலிஸ் பெரி உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவைடமிருந்து தட்டிச் சென்றார்,



  • SHARE
  • விவரம் காண

    வீடியோ: கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர்!

    தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலக அளவில்...

    “என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்” – கிறிஸ் கெயில் வருத்தம்!

    "என்மீதும் இன வெறுப்பை காட்டியுள்ளார்கள்" - கிறிஸ் கெயில் வருத்தம்! கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் என்னை போன்றவர்கள் மீது இன வெறுப்பை காட்டியுள்ளார்கள் என...

    சொந்த அணியில் இடமில்லாததால்.. இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு!

    இனி அமெரிக்காவிற்க்காக கிரிக்கெட் ஆடப்போகிறாரா உலகக்கோப்பை நாயகன்?! லாக்டவுனில் எடுத்த திடீர் முடிவு! சொந்தநாட்டு அணியான இங்கிலாந்தில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால், உலகக்கோப்பையை வென்ற...

    பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? – பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்!

    பகலிரவு டெஸ்டில் எங்களை இந்தியா வீழ்த்த முடியுமா? - பிறந்தநாளன்று இந்தியாவை வம்பிழுத்த ஸ்மித்! இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில்...

    கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. – கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு!

    கோஹ்லியை கண்டு எனக்கு சற்றும் பயம் இல்லை.. - கொக்கரிக்கும் 17 வயது பாக்., சில்வண்டு! விராத் கோலியை கண்டால் எனக்கு சற்றும் பயமில்லை...