Cricket, IPL, IPL 2018, IPL Auction, Expensive Players 2018
ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 12.5  கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 12.5  கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !! 1

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 12.5  கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !! 2

 

கடந்த ஆண்டு புனே அணியால் 14.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டோக்ஸ் தனக்கான அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திருந்தார். இவரை சிறிது நேர போட்டிக்கு பின்  ராஜஸ்தான் அணி 12.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த வருடமே ஐ.பி.எல் தொடரில் முதன்முறையாக பங்கேற்ற ஸ்டோக்ஸ் 12 போட்டிகளில் விளையாடி மொத்தம் 316 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர ஆல் ரவுண்டரான இவர் 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, பல இக்கட்டான நிலையில் புனே அணியின் வெற்றிக்கு உதவியவர்.

ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை 12.5  கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் !! 3

இவரின் வருகை சென்னை ராஜஸ்தான் அணிக்கு நிச்சயம் கூடுதல் பலத்தை கொடுக்கும் என்றே ரசிகர்களும் கருதுகினறனர்.

Leave a comment

Your email address will not be published.