பென் ஸ்டோக்ஸ் கைது!! போலீஸ் சிறையில் ஸ்டோக்ஸ்!! 1

இங்கிலானது அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்தின் பிரிஸ்டோல் நகரின் காவல் நிலைய சிறையில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

பென் ஸ்டோக்ஸ் கைது!! போலீஸ் சிறையில் ஸ்டோக்ஸ்!! 2

இங்கிலனதி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடயேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டோல் நகரில் நடந்தது. இந்த போட்டியில் இங்கிலானது அணி வெற்றி பெற்றது. மேலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 73 ரன்கள் குவித்தார்.

போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகில் இருவரும் சிலருடன் சண்டை இட்தாகத் தெரிகிறது.

மேலும், அந்த சண்டையின் போது பென் ஸ்டோக்ஸ் ஒருவரை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டோல் நக காவல் துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் கைது!! போலீஸ் சிறையில் ஸ்டோக்ஸ்!! 3

இன்னும் அவரிடம் பிரிஸ்டோ காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்க்கு முன்பு 2012 ஆண்டும் இதே போல் அவருடைய ஒழுங்கீனமான நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் 2013 ஆண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்காக ஆடிய போது கடை இரவில் குடித்து விட்டு ஊர் சுற்றியதற்க்காக அவரது நாடான நியூசிலாந்திற்க்கு திருப்பி அனுப்ப பட்டார்.

பென் ஸ்டோக்ஸ் கைது!! போலீஸ் சிறையில் ஸ்டோக்ஸ்!! 2

பின்பு அடுத்த வருடமும் சும்மா இருக்கவில்லை இவரது கை. 2014 ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது அவரது லாக்கரின் அறையில் இருந்த பூட்டை அவரது கையால் ஓங்கி குத்தி அவரது கையை முறித்துக் கோண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது,

தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கயுள்ளார். இவரிடமிருந்தே மேற்கத்திய கலாச்சாரன் எவ்வளவு கொடூரமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியலாம்.

Leave a comment

Your email address will not be published.