சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; இந்த அதிரடி வீரருக்கு அணியில் இடமில்லை! 1

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; ரெய்னா, ஜடேஜா, பாண்டியா இல்லை!

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.

இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையறை இன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அக்டொபர் மாதம் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; இந்த அதிரடி வீரருக்கு அணியில் இடமில்லை! 2

ஆனால், இந்த இக்கட்டான சூழலில் உலகக்கோப்பையை நடத்துவது சாத்தியமற்றது என ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில், கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காததால், வீரர்கள் பலரும் ஆல்டைம் லெவனை தேர்வு செய்து வருகின்றனர். அதேநேரம் ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார்.

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; இந்த அதிரடி வீரருக்கு அணியில் இடமில்லை! 3

அவரது தேர்வில் துவக்க வீரர்களாக ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் மற்றும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளனர். 3வது மற்றும் 4வது இடங்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த இருவர்களான பெங்களூரு கேப்டன் விராட்கோலி மற்றும் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா உள்ளனர்.

5வது இடத்தில் மிஸ்டர் 360 என அழைக்கப்படும் பெங்களூரு அணி வீரர் டி வில்லியர் இருக்கிறார். அடுத்ததாக, சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி உள்ளார். இவர் இந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; இந்த அதிரடி வீரருக்கு அணியில் இடமில்லை! 4

சுழல்பந்துவீச்சை பொறுத்தவரை கொல்கத்தா அணியின் சுனில் நரேன், சென்னை அணியின் ஹர்பஜன் சின் இருவரும் இருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில், ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார், மும்பை அணியை சேர்ந்த மலிங்கா மற்றும் பும்ரா இருவரும் உள்ளனர்.

சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த முன்னாள் இந்திய வீரர்; இந்த அதிரடி வீரருக்கு அணியில் இடமில்லை! 5

அதிரடி வீரர்களான பொல்லார்டு, ரஸ்ஸல் மற்றும் பாண்டியா ஆகியோர் இல்லை. அதேபோல சென்னை வீரர் ஜடேஜாவும் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி(விக்கெட் கீப்பர், கேப்டன்), சுனில் நரைன், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *