கடந்த 6 வருடங்களில் இது தான் முதல்முறை… ஒரே ஒரு தவறான பந்தால் மாறிய புவனேஷ்வர் குமாரின் வரலாறு !! 1

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் புவனேஷ்வர் குமார் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு நோ பால் வீசியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த 6 வருடங்களில் இது தான் முதல்முறை… ஒரே ஒரு தவறான பந்தால் மாறிய புவனேஷ்வர் குமாரின் வரலாறு !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பந்துவீசாத சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார், இன்றைய போட்டியில் வீசிய நோ பால் கடந்த 6 வருடமாக நோ பாலே வீசாத வீரர் என்ற புவனேஷ்வர் குமாரின் பெருமையை தகர்த்துள்ளது.

கடந்த 6 வருடங்களில் இது தான் முதல்முறை… ஒரே ஒரு தவறான பந்தால் மாறிய புவனேஷ்வர் குமாரின் வரலாறு !! 3

கிட்டத்தட்ட 6 வருடங்களாக ஒரு நோ பால் கூட வீசாத புவனேஷ்வர் குமார், தான் வீசிய 3903 பந்துகளுக்கு பிறகு தற்போது தான் நோ பால் வீசியுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி;

அவிக்‌ஷா பெர்னாண்டோ, மினோட் பனுகா, பனுகா ராஜபக்சே, டி சில்வா, சாரித் அஸ்லான்கா, தசுன் ஷனாகா, வானிந்து ஹசராங்கா, சாமிகா கருணாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, லக்‌ஷன் சண்டாகன், கசுன் ரஜிதா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *