மலிங்கா தான் பயம் : புவனேஷ்வர்

இந்திய அணி இரண்டாவது போட்டியில் இலங்கயுடன் போராடி வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் தனது பேட்டிங் திறமையால் இந்திய அணியை கரை சேர்த்தவர் புவனேஷ்வர் குமார். அந்த போட்டியில் மூன்றே ஓவரில் 6 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்து ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை ஏற்ப்படுத்தியவர் இலங்கை அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்சயா. ஆனால்,தனஞ்சயவை விட எனக்கு மலிங்கா வீசும் சொடுக்கு பந்துகளின் மீது தான் அதிக பயமாக இருந்தது என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

 

அது போன்ற ஒரு கடினமாக சூழ்நிலையில் ஆடுவது மிக கடினமான ஒன்று. என்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்த ஏதுவான ஒரு சூழ்நிலை அது. ஓரு 10 அல்லது 15 ஓவர்கள் கலத்தில் இருந்தால் இந்த போட்டியை வெல்ல முடியும் என நம்பிக்கை இருந்தது. – குமார்

நான் ஆடுகளத்திற்க்கு சென்ற போது தனஞ்சயா மிக அருமையா பந்து வீசிக்கொண்டிருந்தார். அவரது கூக்லீக்களால் நான் ஆட முடியாமல் இருந்தேன். ஆனால், தோனி கூறியது போல் அவரை கூக்லீ பந்து வீச்சாளாக நினைத்து உள்ளே வரும் பந்துகளுக்காக ஆடினேன் பின்னர் எளிதானது. ஆனால் , என்னுடைய கவலை அனைத்தும் மலிங்கா வீசும் அவரது ஸ்லோவர் பந்துகளின் மீது தான் இருந்தது. ஐ.பி.எல் ல் ஆடியபோது அவரது ஸ்லோவர் பந்துகள் ஒன்றைக்கூட என்னால் ஆட் இயலவில்லை. – குமார்

“டெஸ்ட் மேட்ச் போல ஆடு புவி”

இந்திய இலங்கை இடையேயான இரண்டாவது போட்டியில் ஹீரோயிசம் செய்து இந்தியாவை அழகாக வெற்றிப்பதைக்கு அழைத்துச் சென்றவர் புவனேஷ்வர் குமார்.237 என்ற எளிதான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 108 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி மிக எளிதாக வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதற்க்குப் பின்னர் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மூன்றே ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வீழ்த்த இந்திய அணி 131 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து மிகவும் தடுமாறியது.

பின்னர் ஒரு புறம் தோனி ஒற்றை இலக்க ரன்னில் இருக்க அவருடன் வந்து ஜோடி சேர்ந்தார் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். இருவரும் மிக பொருமையாக ஆடி இந்திய அணியை 3 விக்கெட் வித்யாசத்தில் கரை சேர்த்தனர். இறுதியாக 80 பந்தில் 53 ரன் எடுத்தார் புவனேஷ்வ்ர குமார். தோனி 68 பந்துகளில் 45 ரன் அடித்தருந்தார். இதில் புவனேஷ்வர் குமாரின் ஸ்ட்ரைக் ரேட் 66.25 ஆகும்.

ஆட்ட முடிவிற்க்குப் பின் பரிசளிப்பு விழாவில் புவனேஷ்வர் குமார் தோனி தான் என்னுடைய இந்த மாதிரியான ஆட்டத்திற்க்கு வழிவகுத்தார் என அவரை புகழ்ந்தார்.

நான் ஆடுகளத்திற்க்குள் செல்லும் போது தோனி என்னிடம் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட அறிவுருத்தினார். மேலும், இதனை ஒரு டெஸ்ட் மேட்ச் போல் நினைத்து ஆட கூறினார். எவ்வித அழுத்தமும் இல்லாமல் மிக இயல்பாக ஆட எனக்கு அறிவுருத்தினார்.

9வது விக்கெட்டிற்க்கு ஆட வந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் அரை சதம் அடித்தார். இதுவே ஒரு நாள் போட்டிகளில் முதல் அரை சதம் ஆகும்.

தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியை டக் வெர்த் லூயிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்யாசத்தில் வென்றது. 3ஆவது போட்டி இன்று அதே மைதானத்தில் மதியம் 2:30க்கு தொடங்குகிறது.

விவரம் காண

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...