Video : இது உனக்கு தேவையா ? பந்தை பிடிக்க முயன்று நிலைதடுமாறி விழுந்த மும்பை பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள் ! 1

14வது ஐபிஎல் சீசனின் 9வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிஙை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டீகாக் 40 மற்றும் ரோதித் சர்மா 32 ரன்கள் குவித்து இருக்கின்றனர். ஹைதராபாத் பவுலர்கள் விஜய் ஷங்கர் மற்றும் அபிஷேக் சர்மா தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருக்கின்றனர்.

Video : இது உனக்கு தேவையா ? பந்தை பிடிக்க முயன்று நிலைதடுமாறி விழுந்த மும்பை பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள் ! 2


இதயைடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 43 ரன்கள் மற்றும் டேவிட் வார்னர் 36 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இவர்களுக்கு பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.

இதில் விஜய் ஷங்கர் மட்டும் இறுதி வரை விக்கெட் இழக்காமல் 28 ரன்கள் அடித்தார். 19.4 ஓவரில் ஹைதராபாத் அணி 10 விக்கெட்களையும் இழந்ததால் மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பெற்றது. மும்பை பவுலர்கள் போல்ட் மற்றும் ராகுல் சஹார் தலா 3 விக்கெட்களை எடுத்து இருக்கின்றனர்.

Video : இது உனக்கு தேவையா ? பந்தை பிடிக்க முயன்று நிலைதடுமாறி விழுந்த மும்பை பவுலரை கலாய்க்கும் ரசிகர்கள் ! 3

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பவுலர் போல்ட் பவுண்டரி நோக்கி வேகமாக செல்லும் பந்தை பிடிக்க முயன்று தனது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் போல்ட்டை கலாய்த்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *