தான் விளையாடுவதிலேயே சிறந்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என திட்டவட்டமாக கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் டிவைன் பிராவோ.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

நான் வழியாகவே நான் விளையாடியதிலேயே மிகச் சிறந்த கேப்டன் தோனி தான் இரண்டு வருடங்கள் பிரையன் லாரா தலைமையில் விளையாடியுள்ளேன் அவரும் நல்ல கேப்டன் தான். ஆனால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலான பகுதிகள் தோனியின் தலைமையில் ஆடியுள்ளேன். ஐபிஎல் தொடரில் பெரிதாக எனக்கு வெற்றி கிடைக்க அவர் பெரும் காரணமாக இருந்தார்.  ஒரு அணியாகவும் தனிநபராகவோ நாங்கள் பல வெற்றிகளை குவித்துள்ளோம் என்று கூறினார் டிவைன் பிராவோ.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கு முன் நாங்கள் 13 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறோம். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுடன் செல்ல முடியுமா? அல்லது வீரர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் காயம் மற்றும் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் வேண்டுமென்றால் இருக்கலாம்.

இந்த வருடத்தில் நாங்கள் ஏராளமான போட்டியில் விளையாட இருக்கிறோம். அதனால் காயங்கள் ஏற்படலாம். காயங்களால் வீரர்கள் இடம்பெற முடியாமல் போவதை தவிர்த்து மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் இருப்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு இடத்தையும் (Slots) பார்த்தீர்கள் என்றால், தனிப்பட்ட வீரர்களால் சிறப்பான வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் ஒவ்வொரு வீரர்களின் பார்ம்-ஐ பொறுத்துதான் அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து செல்வதற்கு யாருக்கும் உத்தரவாதம் கிடையாது.

முன்னதாகவே ஆடும் லெவன் அணி குறித்து கூற இயலாது. ஆனால் நாங்கள் விளையாடும் 13 போட்டிகளில் இடம்பிடிக்கும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஐபிஎல் உள்பட இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட இருப்பதால் உலகக்கோப்பைக்கான 11 அல்லது 12 பேர் கொணட இந்திய அணியை தெரிவிப்பது கடினம்’’ என்றார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிட்னியில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். • SHARE

  விவரம் காண

  எதற்காக ஸ்டோக்சுக்கு அப்படிப்பட்ட யார்க்கர் வீசினேன் தெரியுமா? மிட்செல் ஸ்டார்க் ஓபன் டாக்!

  ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றியில் முடிய இங்கிலாந்து அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் அம்பலமாகிப் போயுள்ளது. பாகிஸ்தானிடம் வாங்கிய...

  இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்!

  இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த...

  வீடியோ: லார்ட்ஸ் பால்கனியில் ரிக்கி பாண்டிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர்!

  இங்கிலாந்து - வேல்ஸ் நகரங்களில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றது ஆஸ்திரேலியா....

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் !!

  நான் பயந்தேனா..? கெவின் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த இயான் மோர்கன் ஸ்டார்க்கின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயான் மோர்கன் அச்சப்பட்டதாக கூறிய கெவின் பீட்டர்சனுக்கு இயான்...

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி !!

  1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த...