யார்க்கர் கிங் நடராஜனுக்கு 4வது போட்டியில் இடம் கொடுத்த பும்ரா ! 1

யார்க்கர் கிங் நடராஜனுக்கு 4வது போட்டியில் இடம் கொடுத்த பும்ரா !

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.

வைரலாகும் வீடியோ  ! காயமடைந்த நண்பனுக்கு வாழைப்பழம் உரித்து கொடுத்த சைனி ! 1

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ரவிந்திர ஜடேஜா,  ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஸ்வின், விஹாரி, பும்ரா ஆகியோர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும் என்பதால் இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இந்திய அணி யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறது.

யார்க்கர் கிங் நடராஜனுக்கு 4வது போட்டியில் இடம் கொடுத்த பும்ரா ! 2

தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகவுள்ளார். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு பதிலாக தமிழக வீரரான தங்கராசு நடராஜன் அணியில் இடம் பெறுவார் என்று பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது நவ்தீப் சைனி அணியில் இடம் பெற்றார். தற்போது 4வது போட்டியில் மீண்டும் நடராஜன் அணியில் இடம் பெறுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *