இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை நேற்று ராஜினாம செய்தார்.தனது பயிற்சியாளர் பதவியை நீட்டிக்க விண்ணப்பித்திருந்தார் கும்ப்ளே. இதற்கு பிசிசிஐயையும் வரவேற்பு தெரிவித்திருந்தது.ஆனால் தற்போது அணில் கும்ப்ளே பதவிவை ரசினமா செய்து விட்டார்.
இதனால் தற்போது அடுத்த பயிற்சியாளரை தேர்ந்து எடுப்பதில் CAC குழு தயாராகி கொண்டு இருக்கிறது.
தலைமை பயிற்சியாளர்கள் விண்ணப்பதாரர்களின் பட்டியலில் ஆறு நபர்கள் இருக்கிறார்கள் இதில் சேவாக் தான் அடுத்த தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் தற்போது தற்போது ஷேவாக் கோபக்காரர், கும்ப்ளே அளவுக்கு பொறுமையானவர் அல்ல. அதிரடி ஆட்டம் மட்டுமே அறிந்தவர். பெரிய அளவில டெக்னிக்கல் வீரர் என்று கூற முடியாது. இவரிடம் எப்படி கோஹ்லி ஒத்துப் போக முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் தற்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு ரவி சாஸ்திரியை தேர்ந்து எடுக்கலாம் என சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோர் கூறிகின்றார்கள். சாஸ்திரி பிரதான பயிற்சியாளராக கோஹ்லி விரும்புகிறார் என்று ரகசியமாக இருப்பதால் சாஸ்திரிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்றும் கூறிவருகிறார்கள். எனினும் சி.ஏ.சி விதிகள் ஒட்டிக்கொள்ள முடிவு செய்தால், சாஸ்திரி தானாக வரவேற்பார்.
தற்போது வரை விண்ணப்பதாரர்களின் பட்டியலில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர் டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் மற்றும் டாட்டா கணேஷ் ஆகியோருடன் முன்னணி வீரர் வீரேந்திர சேவாக் உள்ளார்.
இந்த விண்ணப்பதாரர்களின் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வி.வி.எஸ். லட்சுமணன், சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் பார்த்து வருகிறார்கள்.