ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கேமிரான் வொய்டிற்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு  ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

ஆஷஸ் வெற்றி;

இங்கிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4-0 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றியது.

இதனையடுத்து அடுத்ததாக இங்கிலாந்து அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க உள்ளது.

இதற்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  இதில் இடம்பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின்  சீனியர் வீரரான 34 வயது கேமிரான் வொய்ட் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கேமிரான் வொய்ட் கடந்த 2005ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

சமீபத்திய பிக்பாஸ் லீக் உள்ளிட்ட அனைத்து உள்ளூர் தொடரிலும் மாஸ் காட்டி வரும் கேமிரான் வொய்ட்டிற்கு அதிர்ஷ்டம் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் கதவை தட்டியுள்ளது.

காயம் காரணமாக கிறிஸ் லின் விலகியதால் அவருக்கு பதிலாக கேமிரான் வொய்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் தொடர்களில் கேமிரான் வொய்ட்டின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து தான் அவர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார் என்றும், இந்த வாய்ப்பிற்கு கேமிரான் வொய்ட் தகுதியானவர் தான் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் த்ரிவோர் ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பேஸ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் கேமிரான் வொய்ட், சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் அனுபவம் வாய்ந்த சிறந்த பீல்டரும் கூட. தற்போதைய அணிக்கு கேமிரான் நிச்சயம் தேவை என்றும் தேர்வாளர் ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை, எனக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்தி கொள்வேன் என்றும் கேமிரான் வொய்ட் தன்னடக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான ஆஸ்திரேலிய அணி;

ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்) , டேவிட் வார்னர் ,பாட் கம்மின்ஸ் , ஆரோன் பின்ச், ஜாஸ் ஹசீல்வுட் , தர்வீஸ் ஹெட் , மிட்செல் மார்ஷ், டிம் பைன், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், அண்ட்ரியூ டை, கேமிரான் வொய்ட், ஆடம் ஜாம்பா

இங்கிலாந்து அணி ;

இயான் மார்கன் , மொயீன் அலி, பாரிஸ்டோவ், ஜேக் பால், சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் கர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், லியாம் பிளங்கட், அடில் ரசீத், ஜோ ரூட், ஜேஸன் ராய், டேவிட் வில்லே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் • SHARE

  விவரம் காண

  மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

  எப்பொழுது : மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்,  ஏப்ரல் 24, 2018, இரவு 8 மணியளவில். எங்கே : வான்கடே ஸ்டேடியம், மும்பை வானிலை...

  மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! சன் ரைசஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள்...

  மும்பை – ஹைதராபாத் அணிகள் மோதல்!!! மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். தொடரில் இன்று (ஏப்ரல் 24) இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள்...

  ஜுலன் கோஸ்வாமியின் தபால் தலையை வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளது தபால் துறை

  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுலன் கோஸ்வாமி தனது கிரிக்கெட் பயணத்தில் மேலும் ஒரு சிறப்பை பெற்றுள்ளார். ஜுலன் கோஸ்வாமி...

  இந்த வருடம் இந்தியாவிற்குக் கூட வரக் கூடாது, இந்தியா வந்து சன் ரைசர்ஸ் அணியின் போட்டியை பார்க்கவும் தடை : பாவப்பட்ட வார்னர்

  ஜாலியாக இருக்கிறார், டேவிட் வார்னர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ள நிலை யில், கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சார்...