இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; ரவிசந்திர அஸ்வின் புது விளக்கம் !! 1

இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; ரவிசந்திர அஸ்வின் புது விளக்கம்

வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்துக்கு டார்கெட்டை நிர்ணயிப்பது இன்னும் வெகுதூரத்தில்தான் இருக்கிறது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. ரகானே (25) மற்றும் ஹனுமா விஹாரி (15) ஆகியோர் களத்தில் உள்ளனர். இதுவரை இந்தியா 39 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; ரவிசந்திர அஸ்வின் புது விளக்கம் !! 2

ஆடுகளம் பந்து வீச்சுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் கைவசம் ஆறு விக்கெட்டுகளை வைத்துள்ள இந்தியா சவால் கொடுக்கும் வகையில் நியூசிலாந்து அணிக்கு டார்கெட் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டார்கெட் நிர்ணயம் செய்வது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது என சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் எவ்வளவு ரன்கள் இருந்தால் நான்காவது இன்னிங்சில் நியூசிலாந்தை கட்டுப்படுத்த முடியும் என்று கேட்கிறீர்கள். இன்னும் ஆறு செசன் இருக்கிறது. பாதுகாப்பிற்கான சிறந்த ஸ்கோர் எது என்பதை நாங்கள் சொல்லும் இடத்தில் இல்லை.

இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு இது தான் காரணம்; ரவிசந்திர அஸ்வின் புது விளக்கம் !! 3

அதற்கான வெகுதூரத்தில் நாங்கள் உள்ளோம். ஆடுகளம் இன்னும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் உள்ளது. எவ்வளவு ஸ்கோர் அடித்தால் போதும் என்று நினைக்கக் கூடிய இடத்திற்கு இன்னு நாங்கள் வரவில்லை.

நாங்கள் ஒவ்வொரு செசன், ஒவ்வொரு மணி நேரம் என எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் குறைந்த அளவு ஸ்கோரை எங்களால் நிர்ணயிக்க முடியும். ரகானே, விஹாரி சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் இதே நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது முக்கியமானது. விக்கெட் எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும் என்பதால் அவர்கள் நிர்ணயிப்பார்கள்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *