180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: கார்லோ பிராத்வெயிட்!! 1
DUBAI, UNITED ARAB EMIRATES - SEPTEMBER 24: Carlos Brathwaite of West Indies looks on during the second T20 International match between Pakistan and West Indies at Dubai International Cricket Stadium on September 24, 2016 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 41 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில், ஃபபியன் அலென் வீசிய பந்தில் ஷிகர் தவான் கேட்ச் அவுட் ஆனார்.180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: கார்லோ பிராத்வெயிட்!! 2

பிறகு கேரி பியர் மிட் ஆஃபைப் பின்னுக்குத்தள்ள ரோஹித் சர்மா இம்முறை லாங் ஆன் மேல் சிக்ஸ் அடித்தார். 6 ஓவர்கள் பவர் ப்ளே முடிவில் இந்தியா 49/0 , பிறகு ஆலன் தன் பந்து வீச்சில் ரோஹித் சர்மாவுக்கு ஒரு கேட்சை விட்டார். அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவணுக்கு கீமோ பால் நேரடியான கேட்சை விட்டார். கேட்ச் விட்டது கொடுமை அல்ல மீண்டும் ரோஹித் சர்மா ஸ்ட்ரைக்குக்கு வந்த போது பிராத்வெய்ட் பந்தை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு மீண்டும் ஒரு மிட்விக்கெட் புல்ஷாட் நான்கு ரன்கள் என்று ரோஹித் புகுந்து விளையாடினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். பிறகு ஆலன் ஓவரில் ஸ்லாக் ஸ்வீப்பில் 80மீ பவுண்டரியை அனாயசமாகக் கடந்து செல்லுமாறு சிக்சரை விளாசினார், அடுத்த பந்து மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸ். பீல்டர்கள் வேடிக்கைத்தான் பார்க்க முடிந்தது.

இன்னொரு கேட்சையும் ஆலன் கோட்டை விட்டார். 43 ரன்களில் ஒருமாதிரியான தடுமாற்றமான இன்னிங்சில் தவண் வெளியேறினார். ரிஷப் பந்த் 5 ரன்களில் மிட்விக்கெட் பவுண்டரியில் கேட்ச் ஆகி பியரிடம் வெளியேறினார். இந்த 2 விக்கெட்டுகளுக்குப் பிறகு ரோஹித் ராஜ்ஜியம்தான், ராகுல் இறங்கி 2 பவுண்டரிகளுடன் தொடங்கினார்.  பிறகு பியர் ஓவரில் ரோஹித் சர்மா மீண்டும்  நேராக ஒரு சிக்ஸ் பிறகு ஒருகையில் ஒரு பவுண்டரி என்று திகைக்க வைக்கும் பேட்டிங்கை ஆடினார். ராகுலுக்கும் ஒரு கேட்சை பொலார்ட் லாங் ஆனில் விட்டார்.180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: கார்லோ பிராத்வெயிட்!! 3

20வது ஓவரில் பிராத்வெய்ட் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்த ரோஹித் சர்மா,  ஸ்கூப் ஷாட்டில் லாங் லெக் திசையில் மற்றுமொரு பவுண்டரி அடித்து 4வது டி20 சதமெடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை 58 பந்துகளில் நிகழ்த்தினார். சதத்தைக் கொண்டாட பிராத்வெய்ட்டை மீண்டும் லாங் ஆனில் ஒரு சிக்ஸ் தூக்கினார் ரோஹித்.

கடைசியில் 61 பந்துகளில் 111 நாட் அவுட், ராகுல் 14 பந்துகளில் 26 நாட் அவுட். இந்திய அணி 195/2. மே.இ.தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதிகபட்சமாக பிராத்வெய்ட் 4 ஓவர்களில் 56 ரன்கள் விட்டுக் கொடுத்தா

இதையடுத்து வந்த ரிஷப் பண்ட் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். தொடர்ந்து சரவெடி வெடித்த இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். ராகுல் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்: கார்லோ பிராத்வெயிட்!! 4

இதைத்தொடர்ந்து 196 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து, விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஹோப் 6 (8) ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த ஹெட்மயர் 15 (14), ப்ராவோ 23 (18), ராம்டின் 10 (17) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *