சாஹலின் சுழலில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த டிவில்லியர்ஸ்.. வீடியோ !! 1
சாஹலின் சுழலில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த டிவில்லியர்ஸ்.. வீடியோ

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸை இந்திய அணியின் சாஹல் தனது  சுழல் மூலம் வெளியேற்றியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

சாஹலின் சுழலில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த டிவில்லியர்ஸ்.. வீடியோ !! 2

இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகள் முடிவில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இந்திய அணி  தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சாஹலின் சுழலில் ஸ்டெம்ப்பை பறிகொடுத்த டிவில்லியர்ஸ்.. வீடியோ !! 3

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரர்களான ஹசீம் ஆம்லா(10), மார்கரம் (24) ஆகியோரை ஷர்துல் தாகூர் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் வீசிய அபார சுழலில் சிக்கி ஸ்டெம்ப்பை பறிகொடுத்து வெளியேறினார்.

வீடியோ;

https://twitter.com/rohitpandeyee/status/964477772532985857

இதன் மூலம் போட்டியின் 27 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள தென் ஆப்ரிக்கா அணி 121 ரன்கள் எடுத்துள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *