உலக கோப்பை தொடருக்கு துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் ஷிகர் தவான்  புதிய துவக்க வீரர் இருந்தாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை என்பதுபோல் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது நான் எப்போதும் ரோகித் சர்மாவுடன் இறங்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் ஒன்றும் எனது மனைவி கிடையாது. வேறு மாற்று வீரர் வந்தாலும் அவருடன் ஆடவேண்டும் . பிரித்திக் ஷா என்னுடன் ஆடினாலும் அவருடன் நான் ஆடுவேன். குறிக்கோள் ஒன்றுதான். ஒருவர் அடித்து ஆடினால், ஒருவர் மெதுவாக அவருக்கு சப்போர்ட் செய்து ஆட வேண்டும். இவ்வாறு புதிய துவக்க வீரர் பற்றி பேசியுள்ளார் ஷிகர் தவான்.

TAUNTON, ENGLAND – AUGUST 16: Prithvi Shaw of India U19s bats during the 5th Youth ODI match between England U19s and India Under 19s at The Cooper Associates County Ground on August 16, 2017 in Taunton, England. (Photo by Harry Trump/Getty Images)

உலகக் கோப்பை போட்டியை எதிர்கொள்வதற்கான பலம் இந்தியாவிடம் உள்ளது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அணி எந்த சூழலிலும் ஆடும் நெகிழும் தன்மை கொண்டதாகும். இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப எந்த வீரர்கள் இணைந்து ஆடுவது என முடிவு செய்யப்படும்.
விஜய் சங்கரை தேர்வு செய்த போது, அவர் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்படலாம் எனக் கருதப்பட்டது. எனினும் அனைத்து வீரர்களும் எந்த நிலையிலும் ஆடும் திறன் பெற்றவர்கள்.  நம்மிடம் உள்ள 15 வீரர்களும், எந்த நேரத்திலும் அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்வார்கள்.
எந்த வேகப்பந்து வீச்சாளருக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டால், உடனே நேரடியாக மாற்று வீரர் களமிறக்கப்படுவார்.
கேதார் ஜாதவ் காயம், குல்தீப் யாதவ் பார்மில் இல்லாதது குறித்து பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. வரும் 22-ஆம் தேதி லண்டன் பயணிக்கும் போது, இடம் பெறும் 15 வீரர்கள் குறித்து அறியலாம்.
கேதார் ஜாதவ் காயத்தில் எலும்பு முறிவு இல்லை என்பது ஆறுதலை தருகிறது. அவர் குணமடைந்து வர அவகாசம் உள்ளது.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளுக்கு முன்கூட்டியே திட்டமிட முடியாது. போட்டி நடைபெறும் நேரத்தில் உள்ள தன்மைக்கு ஏற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் அணிகள் இந்த போட்டியில் சிறப்பாக ஆடக்கூடும். மே.இ.தீவுகள் தற்போது மீண்டும் பழைய ஆட்டத்தை தொடர்ந்துள்ளது. அதிரடி பேட்டிங்குக்கு அந்த அணியை மிஞ்ச எவரும் இல்லை. ஆஸி. அணியில் அனைத்து வீரர்களும் இடம் பெற்றுள்ளதால், மற்ற அணிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவர் என்றார். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...