மூத்த வீரர்களுக்கு டாட்டா சொல்லும் சிஎஸ்கே... கழட்டிவிடும் பட்டியலில் முன்னணி வீரர்கள்! 1

அடுத்த ஐபிஎல் சீசன் ஏலத்திற்காக முன்னணி வீரர்களை வெளியேற்ற முற்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் மூன்று பேர்களை மட்டுமே கைவசம் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும். வழக்கமாக மும்பையில் நடத்தப்பட்டு வந்த ஏலம் இந்த ஆண்டு முதல் முறையாக கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது

மூத்த வீரர்களுக்கு டாட்டா சொல்லும் சிஎஸ்கே... கழட்டிவிடும் பட்டியலில் முன்னணி வீரர்கள்! 2

டிசம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்கும் என பிசிசிஐ நிர்வாகம் முன்னதாக அறிக்கையை வெளியிட்டது. இந்த ஏலத்திற்கு யாரை தக்கவைப்பது? யாரை வெளியேற்றுவது? என்ற நடவடிக்கையில் சிஎஸ்கே ஈடுபட்டு வருகிறது.

சிஎஸ்கே வட்டார தகவலின்படி 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ராயுடு, ஏழரை கோடிக்கு எடுக்கப்பட்ட கேதர் ஜாதவ் மற்றும் உள்ளூர் வீரர் முரளி விஜய் போன்ற முன்னணி வீரர்களை சிஎஸ்கே அணி வெளியேற்ற திட்டமிட்டிருக்கிறது. இவர்களுடன் சுழல் பந்து வீச்சாளர் கரண் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷ்ரத்துல் தாகூர் ஆகியோரும் வெளியேற்றப்பட இருக்கின்றனர்.

மூத்த வீரர்களுக்கு டாட்டா சொல்லும் சிஎஸ்கே... கழட்டிவிடும் பட்டியலில் முன்னணி வீரர்கள்! 3

அம்பத்தி ராயுடு கடந்த சீசனில் சரிவர ஆடவில்லை. அடிக்கடி காயம் காரணமாகவும், சரியான பார்மில் இல்லாததாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேதர் ஜாதவ். முரளி விஜய்க்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.

கரண் சர்மா இறுதிவரை இம்ரான் தாஹிர் இடத்தை பிடிக்க முடியாமல் திணறினார். தாகூர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆகியவற்றின் அடிப்படையில், வெளியேற்று படலத்தில்  இந்த ஐந்து பேரும் பெயர்கள் பெயர்கள் பெரிதாக அடிபடுகின்றன.

மூத்த வீரர்களுக்கு டாட்டா சொல்லும் சிஎஸ்கே... கழட்டிவிடும் பட்டியலில் முன்னணி வீரர்கள்! 4

மேலும் சென்னை அணியின் சொத்தாகக் கருதப்படும் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் நிச்சயம் தக்க வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது வீரர் யார் என்பதில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வருகிறார். இவர் இருக்கும் அணியில் பீல்டிங் பலம் பெற்றிருக்கும். பந்துவீச்சில் தீபக் சஹார் அசத்துகிறார். இவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளர் பவர் பிளேவில் நிச்சயம் தேவைப்படும். மூன்றாம் வீரர் யார் என பொறுத்திருந்து காண்போம்.

நவம்பர் 14ஆம் தேதி தக்க வைக்கும் மற்றும் வெளியேறும் வீரர்களின் பட்டியலை வெளியிட அனைத்து அணிகளுக்கும் கடைசி நாள் ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *