CARDIFF, WALES - JULY 05: Ravi Shastri, head coach of the Indian cricket team, looks on during a net session at SWALEC Stadium on July 5, 2018 in Cardiff, Wales. (Photo by Julian Herbert/Getty Images)

உலக கோப்பை தொடருக்கு இந்தியாவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் செய்தாகி விட்டது எனவும் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடரில் ஆடும் இந்திய அணியே கிட்டத்தட்ட உலக கோப்பை தொடரிலும் ஆடும் எனவும் இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி இறுதிகட்ட அறிவுரையை வழங்கியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. வருகிற 21-ந்தேதி டி20 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

இனி 2019 உலககோப்பை வரை இதே அணிதான்: ரவி சாஸ்திரி 1
The 2019 ICC Cricket World Cup trophy pictured infront the statue of first monarch of Kingdom of Nepal Prithvi Narayan Shah in Chandragiri Hills during a country tour in Kathmandu, 

இங்கிலாந்து தொடரில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேப்டன் விராட் கோலி பேட்ஸ்மேன்களுக்கு இறுதிகட்ட அறிவுரையை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா தொடருக்கு புறப்படும் முன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில் ‘‘ஒரு தனி பேட்ஸ்மேன் என்றில்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து எப்படி நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். வேகப்பந்து வீச்சு சூப்பராக உள்ளது. நீண்ட நாட்களாக அவர்கள் 20 விக்கெட்டுக்களை வீழ்த்தி திறமையை பெற்றிருக்கிறார்கள்.

இனி 2019 உலககோப்பை வரை இதே அணிதான்: ரவி சாஸ்திரி 2
India’s Ambati Rayudu plays a shot during the second one-day international cricket match between India and West Indies in Visakhapatnam,

நாம் இங்கிலாந்து தொடரை பார்த்தோம் என்றால், லார்ட்ஸ் டெஸ்டை தவிர்த்து, மற்ற டெஸ்டில் வெற்றியை நெருங்கி வந்து அறுவடை செய்ய முடியாமல் போனது. தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்தோம். ஆனால், ஒரு அணியான நாம் பேட்டிங் செய்யவில்லை என்றால், கிழே விழுந்து தோல்வியடைந்து விடுவோம் என்ற மனநிலை உருவாகிவிடும்.

நம்முடைய திட்டம் எப்போதுமே நடைபெறக்கூடிய தொடரை பற்றிதான் இருக்க வேண்டும். முடிந்துபோன தொடர் குறித்து பேசக்கூடாது. 2014-ல் நமக்கு கடினமான நேரமாக அமைந்தது. ஆனால் அதில் இருந்து நாம் சிறப்பாக வெளியே வந்தோம். அந்த நேரத்தில் என்னிடம் இருந்து சிறப்பான மாற்றம் தொடங்கியது. நாம் எப்போதுமே நிகழ்காலத்தில் நிலைக் கொண்டிருக்க முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் திறமையானவர்கள். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை நாம் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.வ்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *