சிக்ஸர் மன்னன் கிறிஸ் லின்னை 9.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் லின்னை 9.6 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சிக்ஸர் மன்னன் கிறிஸ் லின்னை 9.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா !! 2

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில் தனக்கான அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் லின்னை, நீண்ட நேர போட்டிக்கு பின் 9 கோடியே 60 லட்சம் கொடுத்து கொல்கத்தா அணியே ஏலத்தில் எடுத்துள்ளது.

சிக்ஸர் மன்னன் கிறிஸ் லின்னை 9.6 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா !! 3

ஐ.பி.எல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கிறிஸ் லின் 384 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 23 இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *