கிறிஸ் வோக்ஸை 7.4 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது பெங்களூர் !! 1
கிறிஸ் வோக்ஸை 7.4 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது பெங்களூர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸை, கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 7.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

கிறிஸ் வோக்ஸை 7.4 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது பெங்களூர் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

கிறிஸ் வோக்ஸை 7.4 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது பெங்களூர் !! 3

இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா அணிக்காக கடந்த ஆண்டு விளையாடியவருமான கிறிஸ் வோக்ஸை, பெங்களூர் அணி 7.4 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இவர் தனக்கான அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்திருந்தார்.

ஐ.பி.எல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் வோக்ஸ், 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *