83 திரைபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி: லார்ட்ஸ் மைதானத்தில் சூட்டிங்! 1

இந்தியில் உருவாகும் ’83′ படத்தில் தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83′ என்ற பெயரில் இந்தி படம் உருவாகி வருகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில்தேவ்-ஆக ரன்வீர் சிங் நடிக்கிறார். அந்த அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா நடிக்கிறார்.83 திரைபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி: லார்ட்ஸ் மைதானத்தில் சூட்டிங்! 2

 

இதுபற்றி ஜீவா கூறும்போது, ‘’சங்கிலி புங்கிலி, கலகலப்பு 2 படங்கள் வெற்றி பெற்று கடந்த ஆண்டு எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன. அடுத்து நிறைய கதைகள் கேட்டேன். அதில், கொரில்லா, ஜிப்ஸி படங்களை மட்டுமே தேர்வு செய்தேன். இரண்டு படங்களும் சிறப்பாக வந்தி ருக்கிறது. தற்போது ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். சூப்பர்குட் பிலிம்ஸின் 90 வது படத்தில் நானும் அருள்நிதியும் சேர்ந்து நடித்து வருகிறோம்.

 

இதற்கிடையே முதன் முதலாக, இந்தி படம் ஒன்றில் நடிக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணி, 1983-ல் உலகக் கோப்பையை வென்றதை மைய மாக வைத்து, “83” என்ற படம் தயாராகி வருகிறது. கபீர்கான் இயக்கும் இந்தப் படத்தில் இதில் ரன்வீர் சிங் ஹீரோ. அவருடன் நானும் நடிக்கிறேன். பிரமாண்டமான படம். நான் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவன். நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். கிரிக்கெட் தொடர்பான இந்த படத்தின் ஷூட்டிங்கை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

83 திரைபடத்தின் கிளைமாக்ஸ் காட்சி: லார்ட்ஸ் மைதானத்தில் சூட்டிங்! 3

சுமார், 100 நாள் லண்டனில் ஷுட்டிங் நடக்க இருக்கிறது. அதற்கு இப்போதே தயாராகி வருகிறேன். தமிழக கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிக்கிறேன். அவரது கேரக்டரில் நடிப்பது எனக்கு பெருமை. லகான் , எம்.எஸ்.தோனி படங்களின் வரிசையில் ’1983 வேர்ல்ட் கப்’ படமும் இருக்கும்’’ என்கிறார் ஜீவா.

தற்போது 83 படக்குழு, தற்போது இங்கிலாந்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. 2019 உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் இது படப்பிடிப்புக்கும் உதவுகிறது.

இந்நிலையில் 2019 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14 அன்று நடைபெறவுள்ளது. இதற்குப் பிறகு 83 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் லார்ட்ஸ் மைதானத்தில் படமாக்கப்படவுள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் 10 அன்று 83 வெளிவரவுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *