இனி அமெரிக்காவில் ஐபிஎல்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதில் கொடுத்த பிசிசிஐ !! 1

”ஐபிஎல் தொடரில் அமெரிக்காவில் பிரபலப்படுத்தலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐ இடம் கேட்டதற்கு பிசிசிஐ தற்போது பதில் அளித்துள்ளது”

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிசிசிஐ நடத்தும் இந்தத் தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. 2011-ல் அதிகபட்சமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடின. அதன்பின்னர் 2012 மற்றும் 2013-ல் 9 அணிகள் பங்குபெற்றன. தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன.

இந்நிலையில்தான், ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கடந்த வாரம் லண்டனில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் அடுத்தாண்டு மேலும் சில அணிகளை சேர்க்க வேண்டும் என பேச்சு எழுந்துள்ளது. அதானி குழுமம், டாடா குழுமம், ஆர்.பி.ஜி நிறுவனங்கள் தங்களுக்கென ஒரு அணி வேண்டும் எனக் கூறியிருக்கின்றன.இனி அமெரிக்காவில் ஐபிஎல்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதில் கொடுத்த பிசிசிஐ !! 2

அதானி குழுமம் சார்பில் அஹமதாபாத்தில் இருந்து ஒரு அணியும், ஆர்.பி.ஜி நிறுவனம் சார்பில் புனேவில் இருந்து ஒரு அணியும், டாடா குழுமம் சார்பில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெட்பூரில் இருந்து ஒரு அணியும் உருவாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சில கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் இருந்து அணிகள் வருவதற்காகப் பேசியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஐபிஎல் தொடரில் நடத்தி அங்கு கிரிக்கெட்டை பிரபலப்படுத்தலாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐயிடம் கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த பிசிசிஐ….

இனி அமெரிக்காவில் ஐபிஎல்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதில் கொடுத்த பிசிசிஐ !! 3

மும்பை இந்தியன்ஸ் அணி பிசிசிஐ இல் ஒரு அங்கமாக இருப்பதால் அவர்களின் கேள்விக்கும், அறிவுறுத்தலுக்கு மதிப்பளிக்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி எங்களுக்கு ஒரு அறிவுரை வழங்கி இருந்தது. அதாவது ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளை அமெரிக்காவில் நடத்தினால், அங்கு புதிய ஐபிஎல் மார்க்கெட்டை வளர்க்கலாம் எனவும், கிரிக்கெட்டிற்கும் இது உகந்ததாக அமையும் எனவும் கூறியிருந்தனர்.

ஆனால் இந்த ஐடியாவை உடனடியாக செயல்படுத்த முடியாது. இதில் பல நடைமுறை பிரச்சனைகள் உள்ளது. நமக்கு பொருளாதார ரீதியாக அங்கு லாபம் இருந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை அங்கு நடத்த முடியும் என்று பிசிசிஐ பதிலளித்துள்ளது.இனி அமெரிக்காவில் ஐபிஎல்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதில் கொடுத்த பிசிசிஐ !! 4

2011-ம் ஆண்டு கூடுதல் அணிகளை சேர்க்கும் முயற்சிகள் நடந்தன. அப்போது கேரளா சார்பில் கொச்சி டஸ்கர்ஸ் அணியும் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் வந்தன. பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அந்த அணிகள் இரண்டு வருடத்திற்கு பிறகு நீடிக்கவில்லை. சூதாட்ட புகாரில் சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் தடைவிதிக்கப்பட்ட போது குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட் அணிகள் புதிதாக ஐபிஎல் தொடரில் சேர்க்கப்பட்டன. ஆனால், அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. பங்குதாரர்கள் மேலும் சில அணிகளை கூட்டினால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான் இந்தக்கூட்டம் லண்டனில் நடந்துள்ளது.இதனால், அடுத்த ஆண்டு மேலும் சில அணிகள் ஐபிஎல் தொடரில் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *