சென்னையில் தோனிக்கு கொரோனா பரிசோதனை; ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்? 1

சென்னையில் தோனிக்கு கொரோனா பரிசோதனை; ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்?

சென்னையில் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

சென்னையில் தோனிக்கு கொரோனா பரிசோதனை; ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்? 2

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கவிருந்தது. ஆனால் இந்த கொரோனா பரவல் காரணமாக உலக கோப்பை தொடர் 2022 ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.

அந்த காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இணைந்து ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்க திட்டமிட்டு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது. இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த முடிவு செய்தது. இந்த ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்க இருக்கிறது.

சென்னையில் தோனிக்கு கொரோனா பரிசோதனை; ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்? 3

13 வது சீசன் ஐபிஎல் க்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாகத்தின் சேர்மன் பிரிஜேஷ் படேல் தெரிவித்தார்.

ஐபிஎல் அணி வீரர்கள் இந்தியாவில் இருந்து வருகிற ஆகஸ்டு 20 மற்றும் 22ம் தேதிகளில் துபாய் செல்ல இருக்கின்றனர். துபாய் செல்வதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர். அவர்கள் பயிற்சிக்கு வந்த பின்னர் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியில் ஈடுபடுவர். பயிற்சி துவங்குவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனையும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சி முடிந்தவுடன் ஒருமுறையும் கொரோனா பரிசோதனைகயும் நடத்தப்படும்.

சென்னையில் தோனிக்கு கொரோனா பரிசோதனை; ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்? 4

வீரர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்த பின்னரே குழுவான பயிற்சி நடைபெறும் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ஒரு சில தினங்களில் சென்னை வந்தடையும் தோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு அதே நாளில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

தேவைக்கு ஏற்ப எத்தனை நாட்கள் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று விரைவில் தெரிவிக்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் குறிப்பிட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *