தென் ஆப்ரிக்காவில் புஜாரவிற்கு ஏற்பட்ட சோதனை… மோசமான சாதனை படைத்துள்ளார்.. !! 1
India's batsman Cheteshwar Pujara, right, dives unsuccessfully to avoid a run out as South Africa's bowler Morne Morkel watches during the second day of the second cricket test match between South Africa and India at Centurion Park in Pretoria, South Africa, Sunday, Jan. 14, 2018. (AP Photo/Themba Hadebe)

தென் ஆப்ரிக்காவில் புஜாரவிற்கு ஏற்பட்ட சோதனை… மோசமான சாதனை படைத்துள்ளார்..

தென் ஆப்ரிக்காவுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புஜாரா, மோசமான இரண்டு சாதனைகளுக்கு சொந்தக்காராகியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி, முதல் இன்னிங்ஸில் 335 ரன்களும், அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களும் எடுத்தது.

தென் ஆப்ரிக்காவில் புஜாரவிற்கு ஏற்பட்ட சோதனை… மோசமான சாதனை படைத்துள்ளார்.. !! 2

இதனையடுத்து 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு 387 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான முரளி விஜய்(9), கே.எல் ராகுல் (4) மற்றும் கோஹ்லி (5) என வந்த வேகத்தில் வெளியேறியதால் நேற்றைய ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 35 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

Cricekt, India, South Africa, Aiden Markram
Jasprit Bumra of India celebrates the the wicket of Hashim Amla of South Africa during the third day of the second Sunfoil Test match between South Africa and India held at the Supersport park Cricket Ground in Centurion, South Africa on the 15th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இதனையடுத்து இன்றைய கடைசி நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் இந்திய வீரர் புஜாரா டிவில்லியர்ஸிடம் சிக்கி ரன் அவுட்டானார். இந்த போட்டியின்  முதல் இன்னிங்ஸிலும் ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்த புஜாரா இதன் மூலம் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

முதல் இந்திய வீரர்;

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் அவுட்டான முதல் இந்திய வீரர் என்ற வேதனையான சாதனைக்கு புஜாரா சொந்தக்காரராகியுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் புஜாரவிற்கு ஏற்பட்ட சோதனை… மோசமான சாதனை படைத்துள்ளார்.. !! 3

இந்த நூற்றாண்டின் முதல் வீரர்;

அதே போல் இந்த 21ம் நூற்றாண்டில் இரண்டு முறை ரன் அவுட்டாகிய வீரர் என்ற சோதனையான சாதனைக்கும் புஜாரா சொந்தம் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *