சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 1

சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே

சென்னை அணியுடனான தோல்விக்கு மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் தான் முக்கிய காரணம் என்று ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 2

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

புனே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சேன் வாட்சன் 106 ரன்களும், சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், பிராவோ 24 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 204 ரன்கள் எடுத்தது.

சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 3

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியின் மூன்று முக்கிய வீரர்களான ரஹானே(16), க்ளேசன்(7), சாம்சன்(2) என வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் கூட்டணி சற்று நேரம் தாக்குபிடித்து நிதானமாக ரன் குவித்தது.

சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 4

பட்லர் 22 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 45 ரன்களிலும் விக்கெட்டை இழந்தது தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.3 ஓவரில் 140 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சேன் வாட்சன் தான் அனைத்திற்கும் காரணம்; புலம்பும் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே !! 4

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே, மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஹானே கூறியதாவது, “உண்மையில் சென்னை அணி இந்த வெற்றிக்கு முழு தகுதியானது, இன்றைய போட்டியில் சென்னை வீரர்கள்  அபாரமாக விளையாடினர், இந்த வெற்றி அவர்களுக்கானது. குறிப்பாக சேன் வாட்சன் அற்புதமாக விளையாடினார், அவரின் பழைய ஆட்டத்திற்கும் தற்போதய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன, பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சேன் வாட்சன் சிறந்து விளங்கினார். இந்த போட்டியில் பவுலிங்கில் நாங்கள் நிறைய சொதப்பினோம் ஆனால் சென்னை வீரர்கள் மிக துல்லியமாக பந்துவீசினர். அதே போல் பீல்டிங்கிலும் நிறைய முன்னேற்றங்கள் செய்ய வேண்டும், சேன் வாட்சன் கொடுத்த கேட்ச்சுகளை கோட்டைவிட்டது கூட தோல்விக்கு ஒரு காரணம், இருந்த போதிலும் நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.