இனி எந்த பிரச்சனையும் கிடையாது; டி.20 உலகக்கோப்பையில் அதிரடி மாற்றம் அறிமுகம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது அரையிறுதி ஆட்டங்களுக்கு மாற்றுநாள் வைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு முனைப்பு காண்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தன்னுடைய கோரிக்கையை ஐசிசியிடம் கொண்டு சென்றுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நாக் அவுட் சுற்றான அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து மோதிய ஆட்டம் பலத்த மழையால் கைவிடப்பட்டது. அதிக புள்ளிகள் அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியனானது ஆஸ்திரேலியா.

இனி எந்த பிரச்சனையும் கிடையாது; டி.20 உலகக்கோப்பையில் அதிரடி மாற்றம் அறிமுகம் !! 1

 

மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்துக்கு பதிலாக மாற்று நாள் ஆட்டம் வைக்கப்படவில்லை. இறுதி ஆட்டத்துக்கு மட்டுமே மாற்றுநாள் வைப்பது வழக்கம் என ஐசிசி கூறி விட்டது. இதுதொடா்பாக இங்கிலாந்து மகளிா் அணி கேப்டன் ஹீதா் நைட் உள்பட பலா் அதிருப்தி தெரிவித்தனா். ஐசிசி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இனி எந்த பிரச்சனையும் கிடையாது; டி.20 உலகக்கோப்பையில் அதிரடி மாற்றம் அறிமுகம் !! 2

இந்நிலையில் ஆடவா் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபா்-நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் நவ. 11 சிட்னி, நவ.12 அடிலெய்ட் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் நவ. 15-இல் மெல்போா்னில் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தின்போது மழைபெய்தால் வழக்கம் போல் மாற்று நாள் உள்ளது. போட்டி அமைப்பாளா்கள் அரையிறுதிச் சுற்றுக்கும் மாற்று நாள் வைக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனா். கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவா் கெவின் ராபா்ட்ஸ் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழுவின் போது இப்பிரச்னைக்கு தீா்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளாா். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....