இந்திய அணியின் எதிர்காலமே அந்த பையன் தான்... ஆனா அவருக்கே வாய்ப்பு கொடுக்க மாட்றீங்க; மனோஜ் திவாரி ஓபன் டாக் !! 1

உலகக் கோப்பை தொடரை ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அணிக்கு இருந்தால்,ரிஷப் பண்ட்டை ஆடும் லெவனின் விளையாட வைக்க வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணியின் எதிர்காலமே அந்த பையன் தான்... ஆனா அவருக்கே வாய்ப்பு கொடுக்க மாட்றீங்க; மனோஜ் திவாரி ஓபன் டாக் !! 2

ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில் உலககோப்பை தொடர் நெருங்கிக் கொண்டு வருவதால் இந்த தொடரில் எந்த அணி பலமான அணியாக இருக்கும்..? எந்த இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்..? எந்த பேட்ஸ்மேன் சிறப்பாக செயல்படுவார்.?? எந்த பந்துவீச்சாளர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்..?எது சிறந்த ஆடும் லெவன்..? என்பது போன்று பல்வேறு விதமான தகவல்களையும், எந்த அணியுடன் எப்படி செயல்பட வேண்டும் என்பது போன்ற யோசனைகளையும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணியின் எதிர்காலமே அந்த பையன் தான்... ஆனா அவருக்கே வாய்ப்பு கொடுக்க மாட்றீங்க; மனோஜ் திவாரி ஓபன் டாக் !! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது, “போட்டியை வெற்றி பெற்றுக் கொடுக்கும் திறமை படைத்த ரிஷப் பண்ட் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால், எந்த விலை கொடுத்தாவது அவரை அணியின் விளையாட வைக்க வேண்டும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் நிச்சயம் ரிஷப் பண்ட் இன்றிலிருந்து ஆடும் லெவனில் விளையாட வேண்டும் என்று மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் விளையாடிய அனேகமான போட்டிகளில் ரிஷப் பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.