விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 1

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 2

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இன்று, டெல்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடிக்கு திருமண ஜோடி அழைப்பு விடுத்தனர்.

இன்று டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 3இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, கௌதம் கம்பிர், இந்திய அணியின் துவக்க வீரர் சிகர் தவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 4

விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 5விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 6விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 7விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 3விராட் - அனுஸ்கா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் 9

இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி மும்பையில் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் கோலி இணைகிறார். அவருடன் அனுஷ்கா சர்மாவும் தென் ஆப்பிரிக்கா சென்று புத்தாண்டை சிறப்பிக்க உள்ளனர். இதையடுத்து மும்பை திரும்பும் அனுஷ்கா சர்மா ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *