சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா..? சென்னை அணி அதிரடி அறிவிப்பு

சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இது குறித்து சென்னை அணியின் நிலைப்பாடு என்ன என்பதை சென்னை அணியின் சி.இ.ஓ ஓபனாக தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் முதல் போட்டியில் மட்டும் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதன் பிறகு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியை கூட வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் இழந்த சென்னை அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிக மிக மோசமாக விளையாடி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா..? சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 2

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயூடு போன்ற வீரர்கள் இல்லாதது தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து ரெய்னாவிடமே கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

சமூக வலைதளங்கள் முழுவதிலும் சுரேஷ் ரெய்னா மற்றும் சென்னை அணியின் தோல்வி குறித்தான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா குறித்து சென்னை அணியின் நிலைப்பாடு என்ன என்பதை சென்னை அணியின் சி.இ.ஓ ஓபனாக தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்குமா..? சென்னை அணி அதிரடி அறிவிப்பு !! 3

இது குறித்து சென்னை அணியின் சி.இ.ஓ கூறுகையில் “சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா தானாகவே விலகியுள்ளார். நாங்கள் அவரது முடிவை மதிக்கிறோம், அதனால் இந்த வருட தொடரில் சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் என்பது நடக்காத விசயம். அதே வேளையில் சென்னை அணியின் சி.இ.ஓவாக நான் உறுதி கூறுகிறேன், நிச்சயம் சென்னை அணி இந்த தோல்வியில் இருந்து மீண்டு வரும். அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியில் களமிறங்கிவிட்டால் சென்னை அணியில் நிலவி வரும் பேட்டிங் பிரச்சனை சரியாகிவிடும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *