மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா செய்தது சரியா ? என்ற கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் சொன்ன பதில் ! 1

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா செய்தது சரியா ? என்ற கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் சொன்ன பதில் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில், மே 1ம் தேதி நடைபெற்ற 27வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தால் மோதியது.  இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா செய்தது சரியா ? என்ற கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் சொன்ன பதில் ! 2

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு 72, மொயின் அலி 58 மற்றும் டூ பிளெசிஸ் 50 ரன்கள் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் குவித்தனர்.

இதையடுத்து இந்த மிகப்பெரிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு 87, டீகாக் 38, ரோகித் 35 மற்றும் குர்னால் 32 ரன்கள் குவித்ததன் மூலம் 219 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா செய்தது சரியா ? என்ற கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் சொன்ன பதில் ! 3

இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் அம்பத்தி ராயுடு பார்ட்னர்ஷிப்பில் சதம் விளாசினர். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய வந்த அம்பத்தி ராயுடுவுக்கு ஜடேஜா தொடர்ந்து ஸ்ட்ரைக்கை மாற்றி கொடுத்தார். இதனால் ஜடேஜா மிகப்பெரிய ஷாட்கள் என பெரியளவில் விளையாடவில்லை. 22 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 22 ரன்கள் மட்டும் குவித்து இருக்கிறார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்திருக்கிறார்.

இந்த போட்டி முடிந்த பிறகு ரவிந்திர ஜடேஜா குறித்து சிஎஸ்கே கோச் பிளெமிங் செய்தியாளர்களிடம் பேசினார். “ஜடேஜா பார்ம் இழக்கவில்லை. எதிர்முனையில் ராயுடு ரன்களை குவித்து வந்தார். ஒரு சில நேரங்களில் ஒரு பேட்ஸ்மன் நம்பமுடியாத அளவிற்கு ரன்களை குவித்து வருவார், இதனால் மற்றொரு பேட்ஸ்மன் ஸ்ட்ரைக்கை மாற்றி தருவார். அது தான் நடந்தது. நாங்கள் அவர்களது பார்ட்னர்ஷிப்பை கண்டோம். கடைசி 5-10 ஓவர்கள் அற்புதமாக இருந்தது” என்று கூறியுள்ளார் பிளெமிங். 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா செய்தது சரியா ? என்ற கேள்விக்கு சிஎஸ்கே கோச் பிளெமிங் சொன்ன பதில் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *