இனி எவனும் தேவை இல்ல; அதிரடி முடிவை எடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !! 1

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிங்காக வலம் வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளி பட்டியலிலும் கடைசி இடத்திலேயே உள்ளது.

இனி எவனும் தேவை இல்ல; அதிரடி முடிவை எடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததும், அவர்கள் தொடர் துவங்கும் முன்பே விலகிவிட்ட போதிலும் அவர்களுக்கு மாற்றான வீரர்களை சென்னை நிர்வாகம் இன்னமும் தேர்வு செய்யாமல் இருப்பதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு விட்டதால், அடுத்த ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனி எவனும் தேவை இல்ல; அதிரடி முடிவை எடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !! 3

சென்னை அணியின் உரிமையாளர், தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் அணியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அதிகம் கொண்ட அணியாக இருந்தபோதும் சிஎஸ்கேவின் பேட்டிங் பிரிவு மிக மோசமாக சொதப்பியது அணியின் மேலிடத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளதாக தெரிகிறது.

சிஎஸ்கே வயதானவர்கள் அணி என்ற பிம்பத்தை உடைத்து புது ரத்தம் பாய்ச்சவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் ஆகியோருக்கான வாய்ப்பு கதவு சாத்தப்படலாம் எனத் தெரிகிறது.

இனி எவனும் தேவை இல்ல; அதிரடி முடிவை எடுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி !! 4

2021 ஐபிஎல் தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், ஒவ்வொரு வீரரின் பெர்பார்மன்ஸையும் பொறுமையாக அலசி ஆராய்ந்து முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அணியில் மாற்றம் தேவை என்பதில் நிர்வாகம் திட்டவட்டமாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *