சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ? 1

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ?

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதனால் பல இந்தியர்கள் பாதித்தும் உயிரிந்தும் வருகின்றனர்.

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ? 2

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ? 3

இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை ஒத்திவைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ? 4

இவர்கள் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் மற்ற சிஎஸ்கே வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. மற்ற சிஎஸ்கே வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது வெளிவந்த தகவலின் படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு இரண்டாவது பரிசோதனை செய்யப்பட்டதில் சிஎஸ்கே சிஇஓ காசிக்கு நெகட்டிவ் என வந்திருக்கிறது. ஆனால் மற்ற இருவருக்கும் அப்படி இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து எந்தொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

சிஎஸ்கே உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லையாம் ! நடந்தது என்ன ? 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *