வீடியோ: ‘ரகிட ரகிட’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்! தேங்க்ஸ் சொன்ன சந்தோஷ் நாராயணன்!

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஆடுவது போல வீடியோ செய்து சென்னை நிர்வாகத்தின் ட்விட்டர்  அது தற்போது இணையத்தில் படுவைரல் ஆகியுள்ளது.

உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ துவங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஊரடங்கினால் மார்ச் மாதத்தில் இருந்து எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் இந்தியாவில் நடக்கவில்லை. குறிப்பாக மார்ச் மாதம் இறுதியில் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் தொடர் நடக்காததால் மிகப்பெரிய தொகை பிசிசிஐ-க்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
வீடியோ: 'ரகிட ரகிட' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்! தேங்க்ஸ் சொன்ன சந்தோஷ் நாராயணன்! 2
இதனை சரிசெய்ய செப்டம்பர் அக்டொபர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவந்தது. இதற்கிடையில் அக்டொபர் – நவம்பர் மாதங்களில் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் நடக்காது என ஐசிசி தெரிவித்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு ஐபிஎல் நிர்வாகம் அதே காலகட்டத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்தது.
செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக, அரபு நாட்டிற்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உட்பட அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள்.
இந்த லாக்டவுன் காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எப்போதும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்து ரசிகர்களை கவர்ந்துகொண்டே இருந்தார்கள். அந்த வகையில் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம் பெறும் ‘ரகிட ரகிட’ பாடல் அண்மையில் வெளியானது.
வீடியோ: 'ரகிட ரகிட' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிஎஸ்கே வீரர்கள்! தேங்க்ஸ் சொன்ன சந்தோஷ் நாராயணன்! 3
டிரெண்டிற்கு ஏற்றாற்போல, அந்த பாடலை வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் சமூகவலைத்தள பிரிவு வீடியோ ஒன்றை தயார்செய்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு அந்த பாடலின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வீடியோ:
https://twitter.com/ChennaiIPL/status/1289212277179088897/video/1

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *