இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா..? பிசிசிஐ., மீது விரேந்திர சேவாக் பாய்ச்சல் !! 1

மின்சாரம் இல்லாததால், மும்பை – சென்னை இடையேயான போட்டியின் சில ஓவர்களில் டி.ஆர்.எஸ் இல்லை என அறிவித்த பிசிசிஐ.,யின் முடிவை முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா..? பிசிசிஐ., மீது விரேந்திர சேவாக் பாய்ச்சல் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தோனியை (36*) தவிர மற்ற வீரர்கள் அனைவரும், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 97 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்பின் 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும், 33 ரன்கள் எடுத்த போது 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், திலக் வர்மா (36) மற்றும் சோகீன் (18) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், 14.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா..? பிசிசிஐ., மீது விரேந்திர சேவாக் பாய்ச்சல் !! 3

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம், நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதன் மூலம் நடப்பு தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து இரண்டாவது அணியாக வெளியேறியது.

இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா..? பிசிசிஐ., மீது விரேந்திர சேவாக் பாய்ச்சல் !! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் மட்டமான தோல்வியை சந்தித்ததற்கு, முதல் நான்கு ஓவர்களுக்கு டி.ஆர்.எஸ் கிடையாது என்ற அறிவிப்பும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மின்சார இல்லாத காரணத்தால் 4 ஓவர்களுக்கு பிறகே டி.ஆர்.எஸ் முறைக்கு பிசிசிஐ., அனுமதி வழங்கியது, ஆனால் அதற்குள் சென்னை அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. உலகின் நம்பர் டி.20 தொடர் என அழைக்கப்படும் ஐபிஎல் தொடரில் மின்சாரம் இல்லாததால் டி.ஆர்.எஸ் இல்லை என அறிவித்த பிசிசிஐ,யின் முடிவை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கும், தன் பங்கிற்கு பிசிசிஐ., யை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களாடா..? பிசிசிஐ., மீது விரேந்திர சேவாக் பாய்ச்சல் !! 5

இது குறித்து சேவாக் பேசுகையில், “ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் இது போன்று நடப்பதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மின்சாரம் இல்லை என்றால் அதற்காக டி.ஆர்.எஸ் இல்லை என அறிவிப்பது சரியாகாது. இது போன்ற சிக்கல்கள் வராமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை பிசிசிஐ., தான் செய்ய வேண்டும். இது சாதரண விசயம் இல்லை. இனி ஒருபோதும் இது போன்று நடைபெற கூடாது என்பதில் பிசிசிஐ., கவனம் செலுத்த வேண்டும். பயன்படுத்துப்படும் அனைத்து ஜெனரேட்டர்களும் மைதானத்தில் இருக்கும் லைட்டிற்கு தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதி எதுவும் உள்ளதாக…?, இதை முக்கிய பிரச்சனையாக எடுத்து பிசிசிஐ., அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.