என்ன டீம்ல எடுக்காதீங்க...பெருந்தன்மையுடன் தானாக விலகி கொண்ட பொலார்ட் ; ரோஹித் சர்மா வெளியிட்ட தகவல் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கைரன் பொலார்டிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்காததற்கான காரணத்தை மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

என்ன டீம்ல எடுக்காதீங்க...பெருந்தன்மையுடன் தானாக விலகி கொண்ட பொலார்ட் ; ரோஹித் சர்மா வெளியிட்ட தகவல் !! 2

இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கைரன் பொலார்ட் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஸ்டப்ஸ் மற்றும் சோகீன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

என்ன டீம்ல எடுக்காதீங்க...பெருந்தன்மையுடன் தானாக விலகி கொண்ட பொலார்ட் ; ரோஹித் சர்மா வெளியிட்ட தகவல் !! 3

இந்தநிலையில், இந்த போட்டியில் கைரன் பொலார்ட் விளையாடாததற்கான காரணம் குறித்து பேசிய, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தன்னை ஆடும் லெவனில் எடுக்க வேண்டும் என பொலார்டே கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்ற பிறகு இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “இந்த தொடரில் எதுவுமே எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. எதிர்கால தேவையின் மீதே தற்போது முழு கவனத்தையும் செலுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை அணிக்கு எதிரான போட்டி எப்பொழுதும் சிறப்பானது, இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து கைரன் பொலார்ட் மற்றும் முருகன் அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சோகீன் சிங் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பொல்ர்டே தன்னை ஆடும் லெவனில் தேர்வு செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தார், அதனடிப்படையில் தான் அவருக்கு இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, திரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், டேனியல் சம்ஸ், குமார் கார்த்திகேயா, ஹிர்திக் சோகீன், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ரிலே மெரிடித்.

சென்னை அணியின் ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, மொய்ன் அலி, சிவம் துபே, தோனி, டூவைன் பிராவோ, மகேஷ் தீக்‌ஷன்னா, சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி.

Leave a comment

Your email address will not be published.