மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக டெவன் கான்வே மற்றும் மொய்ன் அலி ஆகியோர் முதல் ஓவரிலேயே ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தனர். மைதானத்தில் நிலவிய மின்சார பிரச்சனை காரணமாக, டெவன் கான்வே தனக்கு கொடுக்கப்பட்ட தேவையற்ற அவுட்டிற்கு, மூன்றாவது நடுவரின் முடிவை நாட முடியாமல் போனதும் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறி கொண்டே இருந்தனர். 6வது விக்கெட்டிற்கு களமிறங்கிய தோனி, தனது பொறுப்பை உணர்ந்து விக்கெட்டை இழக்காமல் 36 ரன்கள் எடுத்தாலும், எதிர்முனையில் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 16 ஓவர்கள் முடிவில் வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக டேனியல் சம்ஸ் 3 விக்கெட்டுகளையும், ரிலே மெரிடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் டெவன் கான்வே டி.ஆர்.எஸ் கேட்கும் வாய்ப்பை இழந்ததை, ஏற்று கொள்ள முடியாத ரசிகர்கள், இது அனைத்திற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களே காரணம் என சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதில் சில;
Never seen a more insecure businessman than Ambani. He saw CSK were coming to equal that 5 titles record by MI and decided to play this dirty trick using his money and influence . Karma will strike hard.
— ` (@FourOverthrows) May 12, 2022
"Devon Conway can't use DRS because of power cut in the stadium"
Mukesh Ambani backstage: pic.twitter.com/Bnsl3pvA7s
— Hemant (@Sportscasmm) May 12, 2022
No DRS because of a power cut at Wankhede 👀
Ambani master plan#CSKvsMI #IPL2022 pic.twitter.com/E1bffE4YkQ pic.twitter.com/slKkzCqaK5— Mokeshwaran .V (@mokeshwaran) May 12, 2022
Job done ambani pic.twitter.com/PBV9nUe6TD
— 🅜🅐__🅝O✭ (@ManoCent1) May 12, 2022
Chumbai pans don't get over excited. Ambani helped you in wankhede. The same chumbai pissed against csk in dy patil stadium https://t.co/iK4497rdBF
— ANIRUDH_BS22 (@AnirudhBs22) May 12, 2022
At Stadium,
Ambani after 2 overs: pic.twitter.com/0RnbTJKTLF
— Karal🍁 (@ItsKaral) May 12, 2022