நாங்கள் அடுத்த போட்டியில் விளையாட போவதில்லை ! பீதியில் இருக்கும் சிஎஸ்கே ! நடந்தது என்ன ? 1

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது.

நாங்கள் அடுத்த போட்டியில் விளையாட போவதில்லை ! பீதியில் இருக்கும் சிஎஸ்கே ! நடந்தது என்ன ? 2

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.

நாங்கள் அடுத்த போட்டியில் விளையாட போவதில்லை ! பீதியில் இருக்கும் சிஎஸ்கே ! நடந்தது என்ன ? 3

இவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதபிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதும் 32வது லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதுள்ளது.

ஏன்னென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பவுலிங் கோச் பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருடன் வீரர்கள் தொடர்பில் இருந்ததால் அனைத்து வீரர்களும் தற்போது அடுத்த 6-7 நாட்கள் குவாரன்டைனில் இருக்கப்போவதாக அந்த அணி கூறியிருக்கிறது. இதன்காரணமாக பிசிசிஐ-யிடம் இந்த போட்டியை ஒத்திவைக்குமாறு சிஎஸ்கே கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் மோதும் 31வது லீக் போட்டி தடைகள் இன்றி நடைபெறும்.

நாங்கள் அடுத்த போட்டியில் விளையாட போவதில்லை ! பீதியில் இருக்கும் சிஎஸ்கே ! நடந்தது என்ன ? 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *