உலகக்கோப்பை செல்லும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!! 15 வீரர்களின் பட்டியல் இதோ.. 1

இந்த வருட உலககோப்பைக்கு செல்லும் 15 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு.

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் மே 30 அன்று இங்கிலாந்து மற்றும் வெல்ஸ் இல் துவங்க உள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து நேரடியாக தேர்வானது. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளும் இடம்பிடித்தன. குவாலிபைர் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகள் என மொத்தம் இந்த வருட உலகக்கோப்பையில் 10 அணிகள் பங்குபெறுகின்றன.

உலகக்கோப்பை செல்லும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!! 15 வீரர்களின் பட்டியல் இதோ.. 2
The 2019 ICC Cricket World Cup trophy pictured infront the statue of first monarch of Kingdom of Nepal Prithvi Narayan Shah in Chandragiri Hills during a country tour in Kathmandu, Nepal on Sunday, October 28, 2018. The 2019 Cricket World Cup is to be hosted by England and Wales from 30 May to 14 July 2019. (Photo by Narayan Maharjan/NurPhoto)

உலககோப்பைக்கு ஆடும் ஒவ்வொரு அணியின் 15 வீரர்களின் பட்டியலை கொடுக்க ஏப்ரல் 23 வரை கெடு கொடுத்திருந்தது ஐசிசி நிர்வாகம். அதேபோல கொடுக்கபட்ட  ஏப்ரல் 30 அவரையும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 3) நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் உலககோப்பைக்கு செல்லும் 15 வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டது.

நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டாம் ப்ளூண்டெல் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்டனர், கொலின் டி க்ராந்தோம், லுக்கி பெர்குசன், டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட், கொலின் முன்ரோ, இஸ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், மார்டின் குப்டில், மாட் ஹென்றி, ஜிம்மி நீஷம்

இதில் சிறப்பு என்னவென்றால், டாம் ப்ளூண்டெல் டெஸ்ட் போட்டியில் அண்மையில் தனது முதல் சாதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், இதுவரை ஒருநாள் போட்டியில் ஆடியதே இல்லை. இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை செல்லும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!! 15 வீரர்களின் பட்டியல் இதோ.. 3

இவர் 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளை மட்டுமே ஆடியுள்ளார். ஒருநாள் போட்டியில் அனுபவமே இல்லாத இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர் உள்ளூர் போட்டிகளில், 40 போட்டிகள் ஆடி 3 அரைசதங்கள் அடித்து, சராசரியாக 23.81 ஐ கொண்டுள்ளார்.

மேலும் ஒரு ஆச்சர்யம், இஸ் சோதி அணியில் இடம்பெற்றது. காரணம், லெக் ஸ்பின்னர் வரிசையில் டாம் அஸ்லே இடம்பெறுவாரா? இல்லை இஸ் சோதியா? என்ற குழப்பம் தேர்வாளர்களுக்கே இருந்தது. பின்னர், 63 சர்வதேச போட்டிகளை ஆடி அனுபவமுள்ள இஸ் சோதிக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை செல்லும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!! 15 வீரர்களின் பட்டியல் இதோ.. 4

அனுபவமுள்ள ரோஸ் டெய்லர் தனது 4 வது உலகக்கோப்பையில் ஆடுகிறார். அதேபோல, கேப்டன் வில்லியம்சன், டிம் சவுத்தி மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோர் 3வது உலகக்கோப்பையில் ஆடுகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *