டேல் ஸ்டெயினின் சர்வதேச போட்டிகள் காயம் காரணமாக தடைப்பட்டது. முழுமையாக குணமடைந்த ஸ்டெயின், தன்னை தயார் நிலையில் வைத்திருந்தும், இந்தியா சுற்றுப்பயணத்துக்கு செல்லும் தென்னாப்பிரிக்க டி20 அணியில் இடம்பெறவில்லை. அணியை அறிவித்த தேர்வுக்குழுவினரும் ஸ்டெயின் தேர்வு செய்யப்படாததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒரு ட்விட்டுக்கு பதிலளித்த ஸ்டெயின் தான் அணி தேர்வின் போது தயார் நிலையில் இருந்ததாக தெரிவித்தார். “நான் தயாராக இருந்தேன்… தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்.” என்று ஸ்டெயின் ட்விட் செய்தார்.

நெயில் மன்த்ரோப் என்பவர் ட்விட்டரில், “புது தேர்வாளர்கள் உங்களை “பெரிய” போட்டிகளுக்காக காக்க வைத்திருக்கிறார்கள்” என்று ட்விட் செய்தார்.

அதிலிருக்கும் உள்ளர்த்தம் புரியாத ஸ்டெயின், “நான் தயாராக இருந்தேன்… தேர்வு செய்யும் போது பயிற்சி ஊழியர்கள் என்னுடைய பெயரை தொலைத்து விட்டிருப்பார்கள்.” என்று பதிலளித்தார்.

 

 

 

டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே, சூழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஷெனுரன் முத்துசாமி மற்றும் விக்கெட் கீப்பர் ரூடி செகன்ட்ஸ் ஆகிய 3 புதுமுக வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20 அணி விவரம் பின்வருமாறு:

குயின்டன் டி காக் (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (துணைக் கேப்டன்), டெம்பா பவூமா, ஜூனியர் டாலா, ஜார்ன் ஃபார்ட்சூன், பெரான் ஹெண்ட்ரிக்ஸ், ரேஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, ஆண்டில் ஃபெலுவாயோ, டுவைன் ப்ரேடோரியஸ், ககிஸோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, ஜான்-ஜான் ஸ்மட்ஸ்.

டெஸ்ட் அணி விவரம் பின்வருமாறு:

ஃபாஃப் டூ ப்ளெஸிஸ் (கேப்டன்), டெம்பா பவூமா (துணைக் கேப்டன்), தேனுஸ் டி ப்ரைன், குயின்டன் டி காக், டீன் எல்கர், ஸூபைர் ஹம்ஸா, கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ராம், ஷெனுரன் முத்துசாமி, லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் ஃபிலாண்டர், டேன் பீடிட், ககிஸோ ரபாடா, ரூடி செகன்ட்.

எய்டன் மர்க்ராம், தேனுஸ் டி ப்ரைன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக இந்திய ஏ அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்கள் மூவரும் டி20 அணிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...