ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…! 1
ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்க தென் ஆப்ரிக்காவின் அசுர வேக பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தயாராக காத்துள்ளார்.

கடந்த வருட ஐ.பி.எல் தொடரில் தென் ஆப்ரிக்கா அணியின் டேல் ஸ்டெயின் தனக்கான அடிப்படை விலையாக 1.5 கோடியை நிர்ணயம் செய்திருந்தார். இவரை ரெய்னா தலைமையிலான குஜராத் அணி ஏலத்தில் எடுத்து கொண்டது. இவர் குஜராத் அணிக்கு மிகப்பெரும் பலமாக இருப்பார் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், காயம் காரணமாக ஒரே ஒரு போட்டியுடன் டாட்டா காட்டி விட்டு தென் ஆப்ரிக்கா பறந்துவிட்டார்.

ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…! 2

தொடர் காயம் காரணமாக ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக உள்ளூர் போட்டிகளில் கூட விளையாட முடியாமல் தவித்து வந்த ஸ்டெயின், கடந்த மாதம் கிரிக்கெட் உலகிற்கு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்தார், ஆனால் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்து தற்போது நடைபெற்று வரும் இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…! 3

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க காத்திருக்கும் ஸ்டெயின் கடந்த வருடம் தனக்கான அடிப்படை விலையாக இருந்த 1.5 கோடியை தற்போது 1 கோடியாக குறைத்து கொண்டாலும், இவரை காயம் விடாமல் துரத்தி வருவதால் இந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில் இவர் விலை போவதே சிரமம் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

களமாட காத்திருக்கும் ஜாஹன் பெஹண்ட்ரூப்;

இதே போல் கடந்த ஆண்டு கவுஹாத்தியில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி.20 போட்டியில், இந்திய அணியின் கோஹ்லி, ரோஹித் சர்மா, தவான், மணிஷ் பாண்டே ஆகிய இந்திய அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரையும் சரித்ததன் மூலம் ஒரே நைட்டில் ஓபாமா அளவிற்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் ஜாஸன் பெஹ்ண்ட்ரூஃப், இந்த வருட ஐ.பி.எல் தொடரில் முதன் முறையாக கால் பதிக்க காத்துள்ளார்.

ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…! 4

தனக்கான அடிப்படை விலையாக 1 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ள பெஹண்ட்ரூஃபை தங்களது அணியில் எடுத்து கொள்ள அணி உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.

ஆனால், அது என்னவோ தெரியவில்லை, யார் எல்லாம் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள் அவர்கள் அனைவரும் அந்த அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வருகின்றனர்.

ஸ்டெயின் ரெடி… கோடிக்களை குவிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியா வீரர்…! 5

இதற்கு உதாரணமாக தைமல் மில்ஸ், பவன் நேகி, பிளிண்டாஃப் உள்ளிட்ட பலரை கூறலாம், இதில் நம்ம ஊர் சிக்ஸர் கிங் யுவராஜ் சிங்கும் விதி விலக்கில்லை.

இந்த வருட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் வைத்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுவரை பொறுத்திருந்து பார்போம்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *